ஜூலை10ல் விருதுநகர் தாயில்பட்டி கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூலை 2011 11:07
வெம்பக்கோட்டை : வெம்பக்கோட்டை தாயில்பட்டி ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில், கருடாழ்வார் சன்னதி அமைக்கப்பட்டு கோயிலும் புனரமைக்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து வரும் 10 ம்தேதி காலை கும்பாபிசேகம் நடைபெறுகிறது. இதையொட்டி லட்சுமி நரசிம்மர்,கருடாழ்வார் மற்றும் விநாயகர் சன்னதிகளுக்கு இன்று முதல் யாகங்கள்,சிறப்பு புஜைகளும் நடைபெறுகின்றன.கும்பாபிஷேகத்தை வானமாமலை ஜீயர் ராமானுஜசுவாமிகள் தலைமையில்,திருக்கோஸ்டியூர் மாதவன் முனிலையில் அனந்தசயன பட்டர் நடத்துகிறார். ஏற்பாடுகளை தாயில்பட்டி கட்டனஞ்செவல் கம்ம மகா ஜன சங்கத்தினர் செய்துள்ளனர்.