பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் நாலடியார் மிகவும் பிரபலமானது. இன்றுவரை பள்ளிக்குழந்தைகளின் தமிழ்ப்புத்தகத்தில் தவறாமல் இடம் பெற்று வருகிறது. நான்கு அடிகளைக் கொண்ட பாடல்களாக வருவதால், இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். இந்நூலை திருக்குறளைப் போல அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்றாகப் பிரித்துள்ளனர். மொத்தம் 40 அதிகாரங்கள் உள்ளன. அதிகாரத்துக்கு பத்து பாடல் வீதம் 400 பாடல்க் இருக்கின்றன. இந்த நூலை குறிப்பிட்ட ஒருவர் பாடவில்லை. பல சமணமுனிவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பே இது. ஆனால், இந்தப் பாடல்களைத் தொகுத்து, அதிகாரவாரியாகப் பிரித்தவர் பதுமனார் என்பவர். நாலடி நானுõறு, வேளாண் வேதம் என்று இந்நூலுக்கு பிற பெயர்கள் உண்டு. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெருமுத்தரையர்கள் என்ற சிற்றரசர்களைப் பற்றி இந்த நூலில் குறிப்பு காணப்படுகிறது. இந்த நூலைக் குறித்து மிகச் சுவையான கதையொன்றும் உண்டு. அதை அடுத்த வாரம் பார்ப்போமா!