பதிவு செய்த நாள்
26
ஜூன்
2015
05:06
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்று படித்திருப்பீர்கள். அவை என்னென்ன என்று தெரிந்து கொள்வோமா! இந்த நூல்களை அகநூல்கள், புறநூல், நீதிநூல்கள் என மூன்றாகப் பிரித்துள்ளனர். அகநூல்கள் பிரிவில், கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை ஆகியவை அடங்கும். புறநூல் பிரிவில் களவழிநாற்பது என்ற ஒரே ஒரு நூல் இருக்கிறது. நீதிநூல்கள் பிரிவில் நாலடியார், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், முதுமொழிக் காஞ்சி, ஏலாதி, நான்மணிக்கடிகை, இன்னிலை ஆகியவை உள்ளன. கூட்டினால் 20 வரும். இதில், இன்னிலை, கைந்நிலை என்ற நூல்கள் மட்டும் பதினெண்கீழ்க்கணக்கு வகை நூலா என்ற சர்ச்சை இருக்கிறது.