திருமழிசை: திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவிலில், ஆனி பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. வெள்ளவேடு அடுத்த, திருமழிசையில் உள்ள ஜெகந்நாத பெருமாள் கோவிலில், ஆனி பிரம்மோற்சவம், நேற்று காலை 6:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, மலர் அலங்காரத்தில் ஜெகந்நாத பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மாலை தங்க தோளுக்கினியானில் ஜெகந்நாத பெருமாள் திருவீதி உலாவும் நடந்தது. ஆனி பிரம்மோற்சவத்தில் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை நாளை ஞாயிற்றுக்கிழமையும், தேரோட்டம், ஜூலை 2ம் தேதியும் நடைபெறும்.