பதிவு செய்த நாள்
27
ஜூன்
2015
11:06
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த புக்கிரவாரி விநாயகர், புத்துமாரியம்மன், நவக்கிரகங்கள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையெ õட்டி நேற்று முன்தினம் கணபதி பூஜை, புண்யாகவஜனம், தனபூஜை, அனுக்ஞை, அஷ்டதிக்ஹோமம், வாஸ்து பூஜை, பிரவேச பலி, அங்குரார்பனம், வேதிகை அர்ச்சனை, மகாசங்கல்பம், விசேஷசாந்தி, ஹோமங்கள் வளர்க்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடந்தது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு திருபள்ளி எழுச்சி, நவக்கிரக, நவசக்தி பூஜை, நாடிசந்தானம், யாத்ராதானம் பூஜைகள் நடந்தது. தொடர்ந்த காலை 8:30 மணியளவில் விநாயகர், புத்துமாரியம்மன் கோவில் கோபுர கலசங்கள் மற்றும் நவக்கிரகங்கள், பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.