முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமை புனித நாளாகும். அன்று எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை வகுத்துள்ளார் நபிகள் நாயகம். “வெள்ளிக்கிழமையன்று நன்றாகக் குளித்து உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். முழுத்துாய்மையுடன் இருக்கும் பழக்கத்தை பேணி வாருங்கள். எவரேனும் வெள்ளிக்கிழமையன்று பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு வந்தால், அவர் குளித்து விட்டு வரட்டும். வாரத்தில் ஒரு முறையாவது ஒரு முஸ்லிம் தன் தலையையும், உடலையும் கழுவி குளித்துக் கொள்வது இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமையாகும். பருவமடைந்த ஒவ்வொருவரும் வெள்ளிக்கிழமை குளித்து விட வேண்டும். இயன்றால் நறுமணம் பூசிக்கொள்ளவும் வேண்டும்,” என்கிறார் அவர். “சூரியன் உதயமாகும் தினங்களில் சிறந்த நாள் வெள்ளிக்கிழமையாகும். இந்நாளில் ஆதம்(அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். மேலும் இந்நாளில் தான் அவர்கள் சுவர்க்கத்தில் நுழைக்கப்பட்டார்கள். மேலும், இந்நாளில் தான் அங்கிருந்து வெளியாக்கப் பட்டார்கள். உலக முடிவுநாளும் இந்நாளில் தான் ஏற்படும்,” என்பதும் நபிகளாரின் கருத்து.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.48 மணி நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.17 மணி.