காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அடுத்த செட்டிகட்டளை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. காட்டுமன்னார்கோவில் அடுத்த செட்டிக்கட்டளை கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ÷ நற்று கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் 25ம் தேதி காலை 10:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. நேற்று 26ம் தேதி காலை 5.30 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது. அதனை தொடர்ந்து 9 மணிக்கு மேல் விநாயகர், முருகன், மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வ ங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.