அய்யனார் கோயில் பாதையை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2015 12:06
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டை அய்யனார் கோயில் பின்புறமுள்ள கோயில்களுக்கு செல்லும் பாதை பழுதடைந்துள்ளதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். அய்யனார் கோயிலில் இருந்து தெற்கு பகுதி ரோடு வழியாக சங்கிலிகருப்பு, காத்தாயி அம்மன், பேச்சியம்மன் உட்பட பல்வேறு கோயில்களுக்கு செல்லலாம். சிவராத்திரி திருவிழாவின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த ரோட்டை பயன்படுத்தி கோயில்களுக்கு செல்வர். கோயில்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்த தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ரோடு பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி மோசமாக உள்ளது. வாகனங்கள் செல்வதில் சிரமம் நிலவுகிறது. ரோட்டின் இரு புறமும் கருவேலமரங்கள் மண்டியுள்ளன. இந்த ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.