பதிவு செய்த நாள்
27
ஜூன்
2015
12:06
அவிநாசி: பூண்டி கோவிலில் கும்பாபிஷேக மண்டலாபிஷேக நிறைவு விழா நேற்று நடைபெற்றது.திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில், கடந்த மாதம், 29ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின், 24 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்றன. நிறைவு விழா நேற்று கணபதி ஹோமத்துடன் துவங்கியது. பின், திருமுருகநாதர், சண்முகநாதர், அம்மன் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளில் உள்ள மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருமுருகநாதசுவாமி அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஸ்ரீசுந்தரர், ஸ்ரீருத்ராபிஷேக, பிரதோஷ வழிபாட்டுக்கு நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.