பதிவு செய்த நாள்
27
ஜூன்
2015
12:06
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் உண்டியல் காணிக்கை, 29 லட்சம் ரூபாய் வந்துள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், மாதந்தோறும் பவுர்ணமி முடிந்த பிறகு, கிரிவலம் சென்ற பக்தர்கள் செலுத்தியிருந்த உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம், அதன்படி, நேற்று முன்தினம் அண்ணாமலையார் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. கோவில் இணை கமிஷனர் செந்தில்வேலவன், உதவி ஆணையர் மோகனசுந்தரம், உள்ளிட்ட, 150பேர் இப்பணியில் ஈடுபட்டனர். இதில், 29 லட்சம் ரூபாய் ரொக்கம், 98 கிராம் தங்கம், 245 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இது, 20 நாள் உண்டியல் காணிக்கையாகும்.