Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீட்டில் இலுப்பெண்ணெய் விளக்கு ... மகிழ்ச்சிக்கு எல்லையேது!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இசைக்கும் இறைவனுக்கும் தொடர்பு உண்டா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2015
03:06

சங்கீதத்தையே இசை என்று சொல்கிறோம். வேதங்களுக்கு உபவேதங்களான காந்தர்வ வேதமே சங்கீத சாஸ்திரம் எனப்படுகிறது. மற்ற வேதங்களைப் போலில்லாமல், நாதத்தையே முக்கியமாகக் கொண்ட இசையானது பகவத் (இறைவன்) ஸ்வரூபம் எனப்படுகிறது. எவ்வாறு வேதங்கள் இறைவனது மூச்சுக் காற்றோ அவ்வாறே சங்கீதமும் இறைவனது மூச்சுக் காற்றே ஆகும். வேதங்களைப் போலவே (ஏழு) ஸ்வரங்கள் சங்கீத சாஸ்ரத்துக்கும் உண்டு. வேதத்தை அக்ஷர ஸ்வர சுத்தத்துடன் உச்சரித்தால் இறைவன் காட்சி தருவார். அதைப்போலவே சங்கீதத்தை அக்ஷர ஸ்வர சுத்தத்துடன் பாடினால் இறைவன் நேரில் வந்து காட்சி தருவார்.

அதைப் போலே சங்கீதத்தை அக்ஷர ஸ்வர சுத்தத்துடன் பாடினால் இறைவன் நேரில் வந்து காட்சி தருவார். புரந்தரதாஸர், அன்னமாச்சார்யா.. இப்படி பல மகான்கள் நாதோபாசனை செய்தவர்கள்தான். நாதமென்னும் இசையையே உருவமில்லாத பரப்ரஹ்மமாக உபாஸித்தவர் ஸத்குரு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள், அவர் தனது கீர்த்தனையில் ஹே பரமேஸ்வரா!  நீ மனிதரைப்போல், கை, கால், போன்ற அவயவங்களுடன் காட்சியளித்தாலும் கூட, உனக்கு மற்ற மனிதர்களைப் போல் மாமிசம், ரத்தம், எலும்பு, நரம்புகளால், உருவான உடல் இல்லை. மாறாக, உனது உடல் நாதம் என்னும் இசை வடிவானது. உனது இசை வடிவான (நாத ஸ்வரூபமான) ஸத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் என்னும் ஐந்து முகங்களிலிருந்துதான் சங்கீத சாஸ்திரத்தின் ஸ-ரி-க-ம-ப-த-நி என்னும் ஏழு ஸ்வரங்களும் தோன்றிற்று. ஆகவே, உனது தநு (உடல்), நாத (இசை) மயமானது என்று மனமுருகப் பாடி உபாஸிக்கிறார். ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள் தனது நாததநும் அநிஸம் சங்கரம் என்னும் கீர்த்தனையில்.

காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவர் ஒரு சமயம் மயிலாப்பூரில் தங்கியிருந்த சமயம். காலை சுமார் ஒன்பது மணிக்கு முசிறி சுப்பிரமணியய்யர் சாலை வழியாக நடந்து சென்றார். அப்போது அதே தெருவில் வசித்து வந்த சங்கீத வித்வான் மதுரை மணி ஐயர் வீட்டு வாசலுக்கு வந்தவுடன் சற்று நேரம் நின்று, அருகில் இருந்தவரிடம் இது மதுரை மணி ஐயர் வீடா? என்று கேட்க, அவரும் ஆமாம். என்று சொன்னார். ஏன் அவன் (மதுரை மணி ஐயர்) வாசலுக்கு (என்னைப் பார்க்க) வரவில்லை? உள்ளே இருக்கானா? கூப்பிடு அவனை என்றார். சிஷ்யரும் உள்ளே சென்று, மதுரை மணி ஐயரிடம் சொல்ல, அவரும் தயக்கத்துடன் வீட்டு வாசலுக்கு வந்து மஹாபெரியவாளை நமஸ்கரித்து, தயக்கத்துடன் நின்றார். மணி! நீ ஏன் வீட்டுக்கு உள்ளேயே இருக்கே? வெளியே என்னைப் பார்க்க வரலையே? நான் வந்தது உனக்குத் தெரியாதா? என்று மஹா பெரியவர் கேட்டார். அதற்கு, என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் வந்தது தெரியும். ஆனால், தங்கள் முன்வரத் தயக்கம் காரணம் தற்போது காலை ஒன்பது மணி. ஆனாலும் கூட இன்னும் நான் ஸ்நானம் செய்யவில்லை. (குளிக்கவில்லை). பெரியவா முன்பாக குளிக்காமல் வருவதற்கு வெட்கமாக தயக்கமாக இருந்தது. அதனால்தான் வரவில்லை என்றார்.

அதற்கு காஞ்சி ஸ்ரீ மஹாபெரியவர், அட! இதுதான் விஷயமா? அசடு! நீதான் எப்போதும் இசையில் மூழ்கிக் கிடப்பவனாச்சே, இசை என்பதும் பகவானும் ஒன்றுதான். ஆகவே, எப்போதும் சங்கீதம் மூலம் பகவானை உபாஸிக்கும் நீ எப்போதும் சுத்த மானவன்தான். மற்றவரைப்போல் ஜலத்தால் குளித்துத்தான் சுத்தமானவனாக வேண்டும் என்பதும் உனக்கில்லை என்று சொன்னார். இது உண்மை தான். சங்கீதம் பாடுதல் என்பது உடலை மட்டுமல்ல; மனதையும் சுத்தப்படுத்தும் அல்லவா! ஆகவே, சங்கீதம் என்பது பகவானை மகிழ்விக்க இறைவனின் அருளை அடைய இறைவன் திருவடியை அடைய மிகச் சுலபமான மார்க்கமாகும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மனநலம், உடல்நலம் சிறக்கும். ஆயுள் அதிகரிக்கும். மரணபயம் ... மேலும்
 
குறைந்தது 9ல் ஆரம்பித்து 11,13, என ஒற்றைப்படையாக இருக்க ... மேலும்
 
ஆசையை குறைக்க வேண்டும் என்பது இதன் ... மேலும்
 
படுக்கும் முன் திருநீறு பூசி சிவன், துர்க்கையை ... மேலும்
 
இருக்க கூடாது. இறப்பு வீட்டில் காரியம் நடக்கும் போது மட்டும் இதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar