அத்திரி முனிவரின் மனைவி அனுசூயாவுக்கு சிவன், திருமால், பிரம்மா ஆகியோர் தனது பிள்ளைகளாகப் பிறக்க வேண்டுமென ஆசை ஏற்பட்டது. இதற்காக அவள் தவமிருந்தாள். அவளைச் சோதிக்க மும்மூர்த்திகளும் சந்நியாசியாக வந்தனர். நிர்வாண நிலையில் தங்களுக்கு உணவளிக்க வேண்டினர். அனுசூயா, தன் கற்பின் திறத்தால் மூவரையும் குழந்தைகளாக மாற்றி பாலுõட்டினாள். கணவரிடம் அந்த குழந்தைகளை ஒப்படைத்தாள். குழந்தைகளை ஒரே உருவமாக்கிய அத்திரி முனிவர், தத்தாத்ரேயர் என பெயரிட்டார். மனிதர்களிடம் மட்டுமின்றி, சிறு சிறு உயிரினங்களின் வாழ்க்கையில் இருந்து பாடம் கற்றுக் கொண்ட தத்தாத்ரேயர் அவற்றை தனது குருவாக ஏற்றார். இவரை மானசீக குருவாக ஏற்பவர்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை.