பதிவு செய்த நாள்
30
ஜூன்
2015
11:06
காரைக்கால்: காரைக்காலில் அமைந்துள்ள அம்மையார் கோவிலில், பிரசித்தி பெற்ற மாங்கனி திருவிழா நாளை (ஜூலை 1ம் தேதி) நடக்கிறது. விழாவையொட்டி, பாதுகாப்பு ஏற்பாட்டிற்காக, நகரின் பல்வேறு இடங்களில் 23 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அறுபத்துமூ ன்று நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு, காரைக்காலில் கோவில் உள்ளது. இக் கோவிலில், அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு மாங்கனி தி ருவிழா, கடந்த 7ம் தேதி துவங்கியது. நேற்று, மாப்பிள்ளை அழைப்பு வைபவம் நடந்தது. இன்று, காரைக்கால் அம்மையார்–பரமதத்தர் திருக்கல்ய õணம் நடக்கிறது. முக்கிய நிகழ்வான, மாங்கனி விழா, ஜூலை 1ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம், சிவபெருமான் பிச்சாண்டவ மூர்த்தியாக வீதி உலா வரும்போது, பக்தர்கள் மாங்கனிகளை வீசி நேர்த்திக் கடன் செலுத்துவர். கண்காணிப்பு கேமராபிரசித்தி பெற்ற இத்திருவிழாவைக் காண, பல் வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவார்கள். போக்குவரத்து மற்றும் பக்தர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, கோவில் நிர்வாகம் சார்பில் முக்கிய வீதிகளான பாரதியார் சாலை, கன்னடியார் வீதி, பெருமாள் கோவில் வீதி, திருநள்ளார் சாலை சந்திப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் 23 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.