பதிவு செய்த நாள்
30
ஜூன்
2015
11:06
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீபூர்ண புஷ்கலாம்பிகை சமேத ஸ்ரீஐயனார் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி கடந்த 27ம் தேதி அனுக்ஞை, ஸ்ரீவிநாயகர் பூஜை, அங்குராரர்ப்பணம், கும்பாலங்காரம், யாக சாலை பிரவேசம் நடந்தது. மறுநாள் காலை பூர்ணாஹூதி, தீபா ரதனையும், நேற்று காலை யாக சாலை பூஜையும் நடந்தது. தொடர்ந்து காலை 6:15 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. யாக சாலை பூஜைகளை அருணாச்சல குருக்கள், மோகனசுந்தர குருக்கள் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா கண்ணன் செய்திருந்தார். விழாவில் எம்.எல்.ஏ., குமரகுரு, ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரி ரமேஷ், துணை தலைவர் ராமலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், முன்னாள் தலைவர்கள் மணி ஐயர், ராமசாமி, நீர் பாசன சங்க தலைவர் சம்பத் ஐயர், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் பரம்பரை அறங்காவலர் விஜயராகவன் ஐயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.