பதிவு செய்த நாள்
30
ஜூன்
2015
11:06
உளுந்தூர்பேட்டை: திருப்பெயர்தக்கா கிராமத்தில் ஸ்ரீமகாகணபதி, ஸ்ரீபாலதண்டாயுதபாணி, ஸ்ரீசோமசுந்தரவள்ளி சமேத சோமநாதஈஸ்வரர், ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீகெங்கையம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா, திருப்பெயர்தக்கா கிராமத்திலு ள்ள ஸ்ரீமகாகணபதி, ஸ்ரீபாலதண்டாயுதபாணி, ஸ்ரீசோமசுந்தரவள்ளி சமேத சோமநாதஈஸ்வரர், ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீகெங்கையம்மன் கோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு, கடந்த 27ம் தேதி காலை 10:30 மணிக்கு ஸ்ரீஅனுக்ஞை, ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மாலை 5:00 மணிக்கு நவக்கிரஹ ஹோமம், தனலட்சுமி பூஜை, யாக சாலை பிரவேசம், பூர்ணாஹூதியும், 28ம் தேதி காலை 7:00 மணிக்கு அங்குரார்பணம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாக சாலை பூஜை, வேதபாராயணம், மாலை 4:30 மணிக்கு 2ம் கால யாக சாலை பூஜை, இரவு 10:30 மணிக்கு ஹோமங்கள், பூர்ணாஹூதி நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று காலை 6:00 மணிக்கு 3ம் கால யாக சாலை பூஜையும், நவாவரண பூஜை, ஹோமங்கள், ரக்ஷபந்தனம், தத்துவார்ச்சனை, யாத்ராதானம், காலை 9:40 மணிக்கு கடம்புறப்பாடு நடந்தது. காலை 10:15 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. யாக சாலை பூஜைகளை சிவபூஜாசேகரன், ராஜசேகரசிவாச்சாரியா, ஸ்ரீபஞ்சாபிகேச ஐயர் ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் குமரகுரு எம்.எல்.ஏ., திருப்பெயர்தக்கா, எஸ்.மலையனுõர், சாத்தனுõர், எடைக்கல், பாலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.