திருநெல்வேலி: நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோயிலில் 511வது ஆண்டு ஆனித்தேரோட்டம் நேற்று நடந்தது.திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்ட விழா கடந்த திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த எட்டு நாட்களும் தினமும் இரவில், சுவாமியும் அம்மனும் வீதிஉலா வந்தனர். 9ம் நாள் திருவிழாவான தேரோட்டம் நேற்று காலை துவங்கியது. அதிகாலை 3.40 மணிக்கு மேல் 4.10 மணிக்குள் சுவாமியும் அம்மனும் தேரில் எழுந்தருளினர். காலை 8.15 மணியளவில் திருத்தேரை வடம் பிடித்து துவக்கிவைத்தனர். தென்மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.