Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சின்னசேலம் அம்மையகரத்தில் ... திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முப்பழ பூஜை! திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா கோலாகலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2015
10:07

காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோவிலில், மாங்கனி திருவிழா, நேற்று வெகு விமரிசையாக நடந்தது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Default Image
Next News

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான, காரைக்கால் அம்மையாருக்கு சிவபெருமான் காட்சியருளிய நிகழ்வை உணர்த்தும் விதமாக, காரைக்காலில் உள்ள, காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா, ஆண்டுதோறும், வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு, மாங்கனி விழா, கடந்த 29ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. அன்று மாலை, பரமதத்த செட்டியார் மாப்பிள்ளை ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம், காரைக்கால் அம்மையார், -பரமதத்தர் திருக்கல்யாண வைபவம் நடந்தது. மாலையில், பிஷாடணமூர்த்தி வெள்ளைசாத்தி புறப்பாடு, இரவு, காரைக்கால் அம்மையார், பரமதத்தர், முத்துப் பல்லக்கில் வீதி உலா வந்தனர். நேற்று காலை, பிஷாடண மூர்த்தி, பஞ்சமூர்த்தி களுக்கு மகா அபிஷேகம் நடந்தது. நான்கு திசையிலும், வேத பாராயணங்கள் எதிரொலிக்க, காலை, 9:05 மணிக்கு, பவழக்கால் விமானத்தில், சிவபெருமான் காவி உடை, ருத்ராட்சம் தாங்கி, பிச்சாண்டவர் மூர்த்தியாக எழுந்தருளி வீதி உலா வந்தார். அப்போது, சிவபெருமானுக்கு பக்தர்கள் மாங்கனிகளை அர்ச்சனை செய்தனர். மேலும், வீடுகளின் மாடிகளில் இருந்து பக்தர்கள் மாங்கனிகளை வீசும் வைபவம் நடந்தது. விழாவில் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள், மாங்கனிகளை பிடிக்க போட்டியிட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar