திருக்கோவிலூர்: வீரப்பாண்டி அதுல்யநாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. திருக்கோவிலூர் அடுத்த வீரப்பாண்டி சவுந்தர்ய கனகாம்பிகை சமேத அதுல்யநாதேஸ்வரர் கோவிலின் ராஜகோபுரம் மற்றும் கோவில் மூலகலசங்கள் புதுப்பிக்கும் பணி நிறைவடைந்தது. இதனையடுத்து நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது.நேற்று அதிகாலை 4.30 மணிக்கு ஆறாம் கால யாக வேள்வி, நாடிசந்தானம், ஸ்பர்சாகுதி, மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ரா தானம், பரிவார கடங்கள் புறப்பாடாகியது. தொடர்ந்து 9.15 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் மூலவர் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். டி.எஸ்.பி., லோகநாதன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் திருஞானசம்பந்த வாமதேவ சிவாச்சார்யார், திருப்பணிக்குழு தலைவர் குப்புசாமிராஜா மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.