காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அடுத்த நெய்வாசல் சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. காட்டுமன்னார்கோவில் அடுத்த நெய்வாசல் சுந்தரேஸ்வரர் கோவில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட சரஸ்வதி கோவில் மற்றும் வளாகத்தில் உள்ள நடராஜர், விநாயகர், சுப்ரமணியர், லட்சுமி, தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், கால பைரவர், நவக்கிரகங்கள், நால்வர் சன்னதிகளுக்கு 65 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 8ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று காலை நான்காவது கால யாகசாலை பூஜையும், 8 மணிக்கு பரிவார கலசங்கள் புறப்பாடும், 9.30 மணிக்கு விமான கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேம் நடந்தது. ஏற்பாடுகளை வக்கீல் சம்மந்தம் உள்ளிட்ட விழாக்குழுவினர் செய்திருந்தனர்.