பதிவு செய்த நாள்
12
ஜூலை
2011 
11:07
 
 ஆழ்வார்குறிச்சி : சிவசைலம் சிவசைலநாதர்-பரமகல்யாணி அம்பாள் கோயிலில் வருஷாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.சிவசைலத்தில் சிவசைலநாதர்-பரமகல்யாணி அம்பாள் கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த ஆண்டு ஜூன் 21ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு நடந்த வருஷாபிஷேக விழாவில் காலை கணபதி பூஜை, கும்ப ஜெபம், வேதபாராயணம், ருத்ர ஏகாதசி ஆகியன நடந்தது.பின்னர் சுவாமி விமானத்திற்கு நாரம்புநாத பட்டரும், அம்பாள் விமானத்திற்கு சிவா பட்டரும் அபிஷேகங்கள் நடத்தினர். அதனை தொடர்ந்து மகா அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை சாயரட்சை தீபாராதனை, சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளல், சிறப்பு பள்ளியறை பூஜை, பைரவர் பூஜை ஆகியன நடந்தது.விழாவில் சென்னை சிம்சன் நிறுவன வைஸ் சேர்மன் அ.கிருஷ்ணமூர்த்தி, பவானி கிருஷ்ணமூர்த்தி, என்.சிவசைலம், பவானி சிவசைலம், கோவை குமார், சென்னை சேது வெங்கட்ராமன், சேதுராஜா அய்யர், ஆம்பூர் காசிவிஸ்வநாதன் மற்றும் கும்பாபிஷேக கமிட்டி உறுப்பினர்கள், தெப்ப உற்சவ கமிட்டி உறுப்பினர்கள், பங்குனி உற்சவ கமிட்டியினர் உட்பட சுற்று வட்டார பொதுமக்கள் கலந்து கொண்டனர்.