பதிவு செய்த நாள்
08
ஜூலை
2015
11:07
கும்பகோணம்: சுவாமிமலை சுவாமிநாத ஸ்வாமி கோவில் உண்டியலில், பக்தர்கள், 10 லட்சத்து, 76 ஆயிரத்து, 648 ரூபாயை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். முருகப்பெருமானின், நான்காவது படை வீடான சுவாமிமலை சுவாமிநாத ஸ்வாமி கோவிலில் மொத்தம், 12 உண்டியல்கள் உள்ளன. இந்த உண்டியல்கள், மாதம் ஒரு முறை திறந்து எண்ணப்படும். அறநிலையத்துறையின் மயிலாடுதுறை மண்டல இணை ஆணையர் ஜெகந்நாதன், ஒப்பிலியப்பன் கோவில் உதவி ஆணையர் மாரியப்பன், கோவில் துணை ஆணையர் அசோக்குமார், ஆய்வாளர் மதியழகன் ஆகியோர் முன்னிலையில் சுவாமிமலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் கோவில் அலுவலர்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலர்கள் ஆகியோர் உண்டியலில் உள்ள பணம் மற்றும் பொருட்களை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அந்த உண்டியலில் மொத்தம், 10 லட்சத்து, 76 ஆயிரத்து, 648 ரூபாய் ரொக்கமும், தங்கம், 63 கிராமும், வெள்ளி, 740 கிராமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.