Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » எவ்வாறு இருத்தல் வேண்டும்?
பக்தன் எவ்வாறு இருத்தல் வேண்டும்?
எழுத்தின் அளவு:
பக்தன் எவ்வாறு இருத்தல் வேண்டும்?

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2015
03:07

1 படந்தோ நாமானி ப்ரமத பரஸிந்தௌ நிபதிதா;
ஸ்மரந்தோ ரூபம் தே வரத கதயந்தோ குணகதா;
சரந்தோ யே பக்தாஸ் த்வயிகலு ரமந்தே பரம் அமூன்
அஹம் தந்யாந் மந்யே ஸமதிகத ஸர்வாபிலஷிதாந்

பொருள்: வரங்களை அளிக்கும் ஸ்ரீஅப்பனே! உனது நாமங்களை படித்துக் கொண்டும், உன்னுடைய அழகான திருமேனியைத் த்யானித்துக் கொண்டும் அமிர்தம் என்னும் கடலில் மூழ்கியுள்ளவர் யார்? உனது அடியார்கள். உனது திருக்கல்யாண குணங்களையும் அவற்றை விளக்கும் கதைகளையும் கூறிக் கொண்டுள்ளனர். அவர்கள் உன்னிடம் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். இத்தகைய உனது பக்தர்கள் மிகுந்த புண்ணியம் செய்தவர்கள் என்று நான் கூறுகிறேன்.

2 கதக்லிஷ்டம் கஷ்டம் தவ சரண சேவா ரஸபரேபி
அனாஸக்தம் சித்தம் பவதி பத விஷ்ணோ குருதயாம்
பவத் பாதாம்போஜ ஸ்மரணரஸிகோ நாம நிவஹான்
அஹம் காயம் காயம் குஹசன விவத்ஸ்யாமி விஜனே

பொருள்: விஷ்ணுவே! குருவாயூரப்பா! வெளியிலும் உள்ளும் உண்டாகும் நோயினால் கஷ்டப்படும் மனமானது, உன்னுடைய திருவடியில் நான் ஈடுபட்டாலும் அதனைத் த்ருப்தியுடன் ஈடுபடவிடாது தடுக்கிறது. ஆகவே எனது பற்று குறைகிறது. இது கஷ்டம் அன்றோ! கருணை காட்டமாட்டாயா? தனியான ஓர் இடத்தில் உனது திருவடித் தாமரைகளைத் த்யானித்தும், அதனால் மனம் நெகிழ்ந்தும், உனது திருநாமங்களைக் கூறிக்கொண்டும் இருக்க விரும்புகிறேன்.

3 க்ருபா தே ஜாதா சேத் கிம் இவ நஹி லப்யம் தநுப்ருதாம்
மதீய க்லேசவுக ப்ரசமனதசா நாம கியதீ
ந கே கே லோகே அஸ்மின் அநிசமயி சோகாபி ரஹிதா:
பவத் பக்தா முக்தா: ஸுககதி மஸக்தா விதததே.

பொருள்: குருவாயூரப்பா! உனது க்ருபை மனிதனிடம் இருக்கும் என்றால் அவனால் அடைய முடியாதது என்ன உள்ளது? இதுபோன்று என்னுடைய துன்பங்களை நீக்குவதும் உனக்கு மிகவும் சுலபமானதே! இந்த உலகில் உனது அடியார்கள் எந்த நேரத்திலும் துன்பம் என்பதே இல்லாமல் பற்று இல்லாதவர்களாக இன்பமாக உள்ளனரே!

4 முனி ப்ரௌடா ரூடா ஜகதி கலு கூடாத்ம கதயோ
பவத் பாதாம்போஜ ஸ்மரண விருஜோ நாரதமுகா:
சரந்தீச ஸ்வைரம் ஸதத பரிநிர்ப்பாத பரசித்
ஸதானந்தாத்வைத ப்ரஸர பரிமக்னா: கிமபரம்

பொருள்: ஈசனே! குருவாயூரப்பா! உலகத்தில் மிகவும் சிறந்து விளங்கும் முனிவர்கள் உனது தாமரை போன்ற திருவடிகளைத் த்யானித்த காரணத்தினால் அனைத்து துன்பங்களும் நீங்கப் பெற்றுள்ளனர். இதனால் தங்கள் விருப்பப்படி அத்வைத ஆனந்தத்தில் திளைத்து எங்கும் உலவி வருகின்றனர். இதற்கு மேல் இவர்களுக்கு கிடைக்கக்கூடிய பேறு என்ன இருக்கு முடியும்?

5 பவத்பக்தி: ஸ்பீதா பவது மம ஸைவ ப்ரசமயேத்
அசேஷ க்லேசவுகம் ந கலு ஹ்ருதி ஸந்தேஹ கணிகா
நசேத் வ்யாஸஸ்ய உக்தி: தவ ச வசநம் நைகமவச:
பவேந்மித்யா ரத்யா புருஷ வசன ப்ராயம் அகிலம்

பொருள்: ஸ்ரீ அப்பனே! உன்னிடம் நான் கொண்டுள்ள பக்தி என்பது முழுமையாக இருக்க வேண்டும். என்னுடைய சகல விதமான துயரங்களையும் அந்த பக்தியே நீக்கி விடும் என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகம் இல்லை. அதனை விடுத்து அந்த பக்தியானது எனது துயரங்களை நீக்குமா என்று ஆராய்ந்தால் - வ்யாஸ பகவான் இயற்றிய பலவும். உனது வாக்கான ஸ்ரீமத் பகவத்கீதையும், வேதங்கள் கூறுவதும் தெருவில் போகும் வழிப்போக்கன் ஒருவன் கூறியது போல் அல்லவா ஆகிவிடும்?

6. பவத் பக்தி: தாவத் ப்ரமுக மதுரா த்வத்குண ரஸாத்
கிமபி ஆருடா சேத் அகில பரிதாப ப்ரசமநீ
புன: அந்தே ஸ்வாந்தே விமல பரிபோதோ தயமிலன்
மஹானந்தாத்வைதம் திசதி கிமத: ப்ரார்த்யம் அபரம்

பொருள்: ஸ்ரீ அப்பனே! உன்னிடம் கொள்ளும் பக்தியானது துவக்கம் முதலே இனிமை அளிக்கிறது. அது மேலும் வளரும்போது அனைத்துத் துயர்களையும் நீக்குகிறது. அது மேலும் முதிர்ச்சி அடையும்போது இதயத்தில் மிகுந்த ஞானம் ஏற்படுத்தி, ப்ரஹ்ம ஐக்கியத்தையும் அளிக்கிறது. இதனை விட வேறு எதுவும் வேண்டுமோ?

7. விதூய க்லேசான் மே குருசரணயுக்மம் த்ருத ரஸம்
பவத்க்ஷேத்ர ப்ராப்தௌ கரமபி ச தே பூஜந விதௌ
பவன்மூர்த்யா லோகே நயனம் அததே பாததுலஸீ
பரிக்ராணே க்ராணம் ச்ரவணம் அபி தே சாருசரிதே

பொருள்: குருவாயூரப்பா! நீ என்னுடைய துயரம் அனைத்தையும் நீக்க வேண்டும். எனது கால்கள் உனது கோயிலை அடையும்படி செய்ய வேண்டும். எனது கைகள் உன்னை பூஜை செய்ய வேண்டும். எனது கண்கள் உனது திருமேனியை மட்டுமே காண வேண்டும். எனது மூக்கு உனது திருவடிகளில் உள்ள துளசியை மட்டுமே நுகர வேண்டும். எனது காதுகள் உனது லீலைகள் அடங்கிய கதைகளை மட்டுமே கேட்க வேண்டும் இவற்றை நீ செய்வாயாக!

8 ப்ரபூதாதி வ்யாதி ப்ரஸப சலிதே மாமக ஹ்ருதி
த்வதீயம் தத்ரூபம் பரமஸுக சித்ரூபம் உதியாத்
உதஞ்சத் ரோமாஞ்சோ கலித பஹு ஹர்ஷாச் ரு நிவாஹோ
யதா விஸ்மர்யாஸம் துருபசம பீடாபரிபவான்

பொருள்: குருவாயூரப்பனே! என்னுடைய உள்ளமானது எனக்கு ஏற்பட்டுள்ள மிகுந்த துன்பங்களாலும் நோய்களாலும் கலக்கமுடன் உள்ளது. அவை நீங்க வேண்டும் என்றால், அந்த உள்ளத்தில் உனது திருமேனி தெரிய வேண்டும். அப்படித் தோன்றும் நேரத்தில் நான் மயிர்க்கூச்சல் பெற்று, கண்கள் ஆனந்தக் கண்ணீர் விடுத்து, அதனால் இந்தத் துயரங்களை மறந்து விடுவேன். இதனை அருள வேண்டும்.

மருத்கேஹாதீச த்வயி கலு பாரஞ்சோபி ஸுகினோ
பவத்ஸ்னேஹீ ஸ: அஹம் ஸுபஹு பரிதப்யே ச கிமிதம்

அகீர்த்திஸ்தே மாபூத் வரத கதபாரம் ப்ரசமயந்
பவத் பகதோத்கம்ஸம் ஜடிதி குரு மாம் கம்ஸ தமன

பொருள்: குருவாயூரப்பா! கம்ஸனை அழித்தவனே! வரங்களை அளிப்பவனே! உன்னிடம் பக்தி இல்லாதவர்கள் கவலையின்றி உள்ளனர். உன்னிடம் மிகுந்த பக்தி உடைய நான் சிரமப்படுகிறேன். இது ஆச்சர்யமாக உள்ளது. இதனால் உன்னை அடைந்தவர்களை நீ காப்பற்றவதில்லை என்று அவப்பெயர் உனக்கு வரக்கூடாது. என்னுடைய வ்யாதிகளை நீக்கி என்னை உனக்குச் சிறந்த அடியானாக ஏற்க வேண்டும்.

கிம் உக்தை: பூயோபி ஸ்தவ ஹி கருணா யாவத் உதியாத்
அஹம் தாவத் தேவ ப்ரஹித விவிதார்த்த ப்ரலபித:
புர: க்லுப்தே பாதே வரத தவ நேஷ்யாமி திவஸாந்
யதாசக்தி வ்யக்தம் நதி நுதி நிவேஷா விரசயந்:

பொருள்: ஸ்ரீஅப்பா! மீண்டும் மீண்டும் கூறுவதால் உண்டாகும் பயன் என்ன? என் மீது உனக்குத் கருணை ஏற்படும் வரை நான் புலம்புவதை விடப்போகிலேன். உனது திருவடிகளில் சரணம் என்று புகுந்து வணங்கி, துதித்து, ஆராதிக்கப் போகிறேன். இப்படியே எனது நாட்களை நான் கழிக்கிறேன்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar