Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » விராட் புருஷ உருவம்
விராட் புருஷ உருவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2015
15:56

1 ஏவம் சதுர்தச ஜகன் மயதாம் கதஸ்ய
பாதாளம் ஈச தவ பாததலம் வதந்தி
பாதோர்த்வ தேசமபி ரஸாதலம் தே
குல்பத் வயம்கலு மஹாதலம் அத்புதாத்மந்

பொருள்: ஸ்ரீ அப்பனே! ஈசனே! தேவர்களின் தேவனே! பதினான்கு லோகமாக ரூபம் கொண்ட விராட் புருஷனின் உள்ளங்கால்கள் பாதாள லோகம் என்றும், கால்களின் மேற்புறம் ரஸாதலம் என்றும், கணுக்கால்கள் மஹாதலம் என்றும் முனிவர்கள் கூறுகின்றனர். (பாதாளம், ரஸாதலம், மஹாதலம் ஆகியவை கீழ் லோகங்கள்).

2 ஜங்கே தலாதலம் அதோ ஸுதலம் ச ஜாநூ
கிம்ச ஊருபாகயுகலம் விதாலதலே த்வே
க்ஷோணீ தலம் ஜகநம் அம்பரம் அங்க நாபி:
வக்ஷஸ்ச சக்ர நிலயஸ்தவ சக்ரபாணே

பொருள்: குருவாயூரப்பனே! சக்கரத்தை கையில் ஏந்தியுள்ளவனே! உன்னுடைய முழங்கால்களே தலாதலம். தொடைகள் ஸுதலம், இரு தொடைகளும் விதலம் மற்றும் அதலம், இடுப்பு பூலோகம், தொப்புள் ஆகாயம் (வானம்), மார்பு ஸ்வர்கம் என்றும் கூறப்பட்டது. (இங்கு தலாதலம், ஸுதலம், அதலம், விதலம் ஆகியவை கீழ் லோகங்கள் ஆகும்).

3. க்ரீவா மஹ: தவமுகம் ச ஜநஸ்தபஸ்து
பாலம் சிரஸ்தவ ஸமஸ்த மயஸ்ய ஸத்யம்
ஏவம் ஜகன்மயதனோ ஜகதாச்ரிதைர
அந்யைரபி நிபத்த வபுஷே பகவந் நமஸ்தே

பொருள்: குருவாயூரப்பனே! உனது கழுத்து மஹர்லோகம், எங்கும் நிறைந்துள்ள உனது தலையானது ப்ரம்மலோகம் ஆகும். இப்படியாக பதினான்கு லோகங்களையும் உனது உடலின் உறுப்புகளாகக் கொண்டவனே! இந்த லோகங்களில் உள்ள அனைத்துப் பொருட்களுமே உன் உடலில் உள்ளன. இப்படியான உடலை உடைய உனக்கு என் நமஸ்காரங்கள்.

4. த்வத் ப்ரஹ்மரந்தர பதம் ஈச்வர விச்வகந்த
சந்தாம்ஸி கேசவ கனா: தவ கேசபாசா:
உல்லாஸி சில்லியுகலம் த்ருஹிணஸ்ய கேஹம்
பக்ஷ்மாணி ராத்ரி திவஸௌ ஸவிதா ச நேத்ரே

பொருள்: ஈசனே! உலகின் கர்த்தாவே! குருவாயூரப்பனே! உனது தலை உச்சி (கபாலம்) என்பது வேதங்கள், அடியார் துயரை நீக்குபவனே (கேசவன்) உனது தலைமுடிகள் மேகங்கள்: மிகவும் அழகான புருவங்கள் இரண்டும் ப்ரும்மாவின் வீடு; உனது இரு கண், இமைகள் இரவு பகல்; கண்களே சூரியன் ஆகும்.

5. நி: சேஷ விச்வரசனா ச கடாக்ஷ மோக்ஷ:
கர்ணௌ திச: அச்வியுகலம் தவ நாஸிகே த்வே
லோபத்ரபே ச பகவன் அதரோத்த ரோஷ்டௌ
தாராகணாத் ச தசனா: சமன: ச தம்ஷ்டரா

பொருள்: பகவானே! குருவாயூரப்பா! இந்த உலக ஸ்ருஷ்டி என்பது உனது திருக்கண்களின் கடாட்ச பார்வையாகும். காதுகளோ திசைகள், மூக்குகள் அச்வினி தேவர்கள், கீழ் உதடு என்பது லோபம், மேல் உதடு வெட்கம், பற்களோ நட்சத்திரங்கள், தெற்றிப்பல் என்பதோ யமனாகும்.

6. மாயா விலாஸ ஹஸிதம் ச்வஸிதம் ஸமீரோ:
ஜிஹ்வா ஜலம் வசனம் ஈச சகுந்த பங்க்தி:
ஸித்தா தய: ஸ்வரகணா முகரந்த்ரம் அக்னி:
தேவாபுஜா: ஸ்தனயுகம் தவ தர்மதேவ:

பொருள்: ஈசனே! குருவாயூரப்பா! உன்னுடைய மனங்கவரும் புன்சிரிப்பு மாயை, உனது மூச்சானது வாயு, நாக்கானது நீர், வாக்கு என்பது பறவைகளின் கூட்டம், ஸ்வரங்கள் என்பது சித்தர்கள் கூட்டம், வாயானது அக்னி, கைகளோ தேவர்கள், உனது இரு ஸ்தனங்களும் தர்மதேவன் ஆகும்.

7. ப்ருஷ்டம் து அதர்ம இஹ தேவ மன: ஸுதாம்சு:
அவ்யக்தம் ஏவ ஹ்ருதயாம்புஜம் அம்புஜாக்ஷ
குஷி: ஸமுத்ர நிவஹா வஸனம் து ஸந்த்யே
சேப: ப்ரஜாபதி: அஸௌ வ்ருஷணௌ ச மித்ர:

பொருள்: தேவர்கள் தேவனே! குருவாயூரப்பனே! தாமரை போன்ற அழகிய கண்கள் உடையவனே! உனது உடலின் பின்புறம் அதர்ம தேவதை, மனமோ சந்த்ரன், இதயமானது அவ்யக்தம் (ப்ரக்ருதி), வயிறோ சமுத்திரங்கள், அணிந்துள்ள ஆடையோ ஸந்த்யாகாலம், ஆண் குறியானது ப்ரஜாபதி மற்றும் அண்டகோசம் இரண்டும் மித்ர தேவதை ஆகும்.

8. ச்ரோணீஸ்தலம் ம்ருககணா: பதயோ: நகா: தே
ஹஸ்தி உஷ்ட்ர ஸைந்தவமுகா: கமனம் து கால:
விப்ராதி வர்ண பவனம் வதனாப்ஜ பாஹு:
சாரூரு யுக்ம சரணம் கருணாம்புதே தே

பொருள்: கருணையே கடலாக உள்ளவனே! குருவாயூரப்பனே! உனது இடுப்பானது மிருகக் கூட்டம்; காலில் உள்ள நகங்கள் யானை, குதிரை போன்றவை; உனது கம்பீர நடையானது காலம்; உனது தாமரை போன்ற முகம், கைகள், தொடைகள் மற்றும் கால்கள் என்பவையே ப்ராமணன் போன்ற வர்ணங்கள் ஆகும்.

9. ஸம்சார சக்ரம் அயி சக்ரதர க்ரியாஸ்தே
வீர்யம் மஹாஸுரகணா: அஸ்தி குலானி சைலா:
நாட்ய: ஸரித்ஸமுதய: தரவ: ச ரோம
ஜீயாத் இதம் வபு: அநிர்வசநீயம் ஈச

பொருள்: சக்கரத்தை ஏந்தியவனே! ஈசனே! குருவாயூரப்பனே! உன்னுடைய செயல்கள் அனைத்தும் சம்சார சுழற்சியான பிறப்பு இறப்பு என்பவை; உனது வீரதீரம் அசுரர்கள்; உனது எலும்புகளோ மலைகள்; உனது நாடி நரம்புகள் என்பது நதிகள்; உனது முடிகளோ மரங்கள் ஆகும். இப்படியாக வர்ணனை செய்யவே இயலாததாக உள்ள இந்த விராட் புருஷனின் திருமேனி என்றும் வெற்றி பெறுக!

10. ஈ த்ருக் ஜகன்மய வபு: தவ கர்ம பாஜாம்
கர்மா வஸான ஸமயே ஸ்மரணீய மாஹீ:
தஸ்ய அந்தராத்ம வபுஷே விமலாத்மனே தே
வாதால வாதிப நமோஸ்து நிருந்த்தி ரோகான்

பொருள்: அனைத்திற்கும் அந்தர்யாமியாகவும், எங்கும் நிறைந்து, நிர்மலமாகவும் உள்ளவனே! குருவாயூரப்பனே! உன்னுடைய இந்தத் திருமேனியின் தோற்றம் என்பது தங்கள் கர்மங்களைச் சரியாக நிறைவேற்றுபவர் யாரோ அவர்களுக்கு அந்தக் கர்மங்கள் முடிவுறும் நேரத்தில் த்யானிக்கத் தக்கது என்று சொல்கிறார்கள். இப்படியான உனக்கு என் நமஸ்காரம். எனது வ்யாதிகளை நீதான் போக்க வேண்டும்.

இப்படி பட்டத்ரி கூறியவுடன் அதற்கு சரி என்பது போல் பகவான் தலையை அசைத்து தன் சம்மதத்தைத் தெரிவித்தார்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar