Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் ... திருப்பரங்குன்றத்தில் மலைமேல் செல்ல தடை; பாதைகள் அடைக்கப்பட்டதால் போலீசாருடன் குடியிருப்போர் வாக்குவாதம் திருப்பரங்குன்றத்தில் மலைமேல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவிலில் திருமங்கை ஆழ்வார் வைபவம்
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவிலில் திருமங்கை ஆழ்வார் வைபவம்

பதிவு செய்த நாள்

04 டிச
2025
03:12

மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர வைபவம் நடந்தது.


கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். வைணவத்தில் பன்னிரு ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வார் ஜென்ம நட்சத்திரமான, கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரத்தில் அனைத்து வைணவ திருத்தலங்களிலும், திருமங்கை ஆழ்வார் வைபவம் சிறப்பாக நடைபெறும். காரமடை அரங்கநாதர் கோவிலில் திருமங்கை ஆழ்வார் வைபவத்தில் அதிகாலை மூலவர் அரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் கால சந்தி பூஜை முடிந்து, திருமங்கை ஆழ்வார் உற்சவமூர்த்தி, ராமானுஜர் சன்னதிக்கு எழுந்தருளினார். அங்கு விஷ்வக்ஷேனர் பூஜை, புண்ணியா வசனம், கலச ஆவாஹனம், ஸ்தபன திருமஞ்சனம் ஆகியவை நடந்தன.  பின்பு வெள்ளி சப்பரத்தில் வெண் பட்டுக்குடை சூழ, மேளதாளம் முழங்க கோவில் வளாகத்தில் வலம் வந்து, ரங்க மண்டபத்தில் அரங்கநாத பெருமாள் முன், திருமங்கையாழ்வார் வீற்றிருந்தார். அங்கு அவருக்கு மாலை, பரிவட்டம், சடாரி மரியாதை அளிக்கப்பட்டது. இந்த வைபவத்தில் கோவில் ஸ்தலத்தார்கள் வேதவியாச பட்டர், திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஆகியோர் தமிழ் வேதமாகிய திவ்ய பிரபந்தத்தில், திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்த பாசுரங்களை சேவித்தனர். மீண்டும் சடாரி மரியாதை பெற்று ராமானுஜர் சன்னதியை அடைந்தார். உச்சிக்கால பூஜை, சாற்று முறையை அடுத்து, மகா தீபாராதனை நடந்தது. இந்த வைபவத்தில் அர்ச்சகர்கள், மிராசுதாரர்கள், கோவில் செயல் அலுவலர் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar