பதிவு செய்த நாள்
08
ஜூலை
2015
04:07
1 ஏவம் தாவத் ப்ராக்ருத ப்ரக்ஷயாந்தே
ப்ராஹ்மே கல்பேஹி ஆதிமே ஸப்த ஜன்மா
ப்ரஹ்மா பூய: த்வத்த ஏவ ஆப்ய வேதான்
ஸ்ருஷ்டிம் சக்ரே பூர்வ கல்போபமாநாம்
பொருள்: ஸ்ரீ அப்பனே! இப்படியாக ப்ராக்ருத ப்ரளயம் என்பது முடிந்த பின்னர் (காலத்தின் முடிவு என்பது நித்தியப் ப்ரளயம்; சங்கர்ஷணனான பகவான் முகத்தில் இருந்து தோன்றும் அக்னி அனைத்தையும் அழிப்பது நைமித்திகப் ப்ரளயம்; ஸத்வ, ரஜோ, தமஸ் குணங்கள் ஒன்றிவிடுவது ப்ராக்ருதப் ப்ரளயம்) முதலில் தோன்றும் ப்ரம்ம கல்பம் என்ற காலத்தில் ப்ரும்மா (நான்முகன்) தோன்றினான். அவன் உன்னிடம் இருந்து வேதங்களைக் கற்று, மீண்டும் முந்தைய கல்பத்தில் எவ்வாறு காணப்பட்டதோ அவ்விதமே ஸ்ருஷ்டியைத் துவக்கினான்.
2. ஸோ அயம் சதுர்யுக ஸஹஸ்ரமிதாநி அஹானி
தாவன்மிதா: ச ரஜநீ: பஹுசோ நிநாய
நித்ராதி அஸௌ த்வயி நிலீய ஸமம் ஸ்வஸ்ருஷ்டை:
நைமித்திக ப்ரளயம் ஆஹு அத: அஸ்ய ராத்ரிம்
பொருள்: குருவாயூரப்பனே! ப்ரும்மா ஆயிரம் சதுர்யுகங்களைத் தனது பகலாகவும், ஆயிரம் சதுர் யுகங்களைத் தனது இரவாகவும் அளித்தான். (நமது ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தேவர்களின் பன்னிரண்டு ஆயிரம் நாள் சேர்ந்தது ஒரு சதுர்யுகம் ஆகும். ஆக, இரண்டு ஆயிரம் சதுர் யுகம் சேர்ந்தது ப்ரும்மாவுக்கு ஒரு நாள் ஆகும்.) ப்ரும்மா உறங்கும்போது தான் உண்டாக்கிய அனைத்தையும் தன்னிடத்தில் இணைத்தே உறங்குகிறான். ஆக, ப்ரும்மாவின் இரவு என்பதே நைமித்திகப் ப்ரளயம் ஆகும்.
3. அஸ்மாத்ருசாம் புன: அஹமுக க்ருத்ய துல்யாம்
ஸ்ருஷ்டிம் கரோதி அனுதினம் ஸ பவத்ப்ரஸாதாத்
ப்ராக் ப்ரஹ்ம கல்ப ஜனுஷாம் ச பராயுஷாம் து
ஸுப்த ப்ரபோதந ஸமா அஸ்தி ததா விஸ்ருஷ்டி:
பொருள்: குருவாயூரப்பனே! உன்னுடைய அனுக்ரஹத்தால் மட்டுமே ப்ரும்மா தினமும் எங்களைப் போன்றோர் செய்யும் காலைக் கடன்கள் போல், தனது ஸ்ருஷ்டி என்னும் செயலைப் புரிகிறான். முந்தைய கல்பத்தில் பல சிரஞ்ஜீவிகள் (சாகாவரம் பெற்றவர்கள்) வாழ்ந்திருக்கக்கூடும். அவர்களுக்கு இந்த ஸ்ருஷ்டி என்பது தூங்கி எழுவது போன்றது ஆகும். (சிரஞ்சீவிகள் = அசுவத்தாமன், பலி, வியாஸன், அனுமன், விபீஷணன், க்ருபாச்சார்யன், பரசுராமன்)
4. பஞ்சா சதப்தம் அதுநா ஸ்வ வயோர்த ரூபம்
ஏகம் பரார்தம் அதிவ்ருத்ய ஹி வர்த்த தே அஸௌ
தத்ர அந்த்ய ராத்ரி ஜனிதான் கதயாமி பூமன்
பச்சாத் தினாவதரணே ச பவத் விலாஸான்
பொருள்: ஸ்ரீ அப்பனே! தற்போது ப்ரும்மா தன்னுடைய ஆயுளில் ஐம்பது வருடத்தைக் கழித்துள்ளான். இந்த ஐம்பது வருடம் என்பது ஒரு பரார்த்த காலம் எனப்படும். இத்தகைய பரார்த்த காலத்தில், கடைசி இரவில் நிகழ்ந்தவற்றையும் அடுத்த நாள் காலையில் நிகழ்ந்தவற்றையும் கூறுகிறேன். என்ன நிகழ்ந்தன? அவை உனது லீலைகளே ஆகும்.
5. தினாவ ஸானே அத ஸரோஜ யோனி:
ஸுஷுப்திகாம: த்வயி ஸந்நிலில்யே
ஜகந்தி ச த்வஜ்ஜடரம் ஸமீயு:
ததா இதம் ஏகார்ணவம் ஆஸ விச்வம்
பொருள்: குருவாயூரப்பனே! ப்ரும்மா தனது ஒரு நாள் பகலை முடித்துக் கொண்ட பின்னர் தூக்கத்தை விரும்பியவனாய் உன்னிடம் இணைந்தான். (உறக்கம் என்பதே பரப்ரஹ்மமான நாராயணனிடம் இணைவது என்று பிரஹ்ம சூத்திரம் கூறுகிறது). அந்த நேரத்தில் மூன்று உலகங்களும் உன்னுடைய வயிற்றில் ஒடுங்கின. இப்படியாக இந்த உலகம் முழுவதும் சமுத்திரமாகவே மாறியது.
6. தலைவ வேஷ பணிராஜி சேஷே
ஜலைகசேஷே புவனே ஸ்மசேஷே
ஆனந்த ஸாந்த்ரானுபவ ஸ்வரூப;
ஸ்வயோக நித்ரா பரிமுத்ரிதாத்மா
பொருள்: குருவாயூரப்பனே! அனைத்து உலகங்களும் ப்ரளயத்தில் நீரில் மூழ்கி உள்ளபோது நீ உனது மற்றோர் அவதாரமான ஆதிசேஷன் மீது ஆனந்தமே உருவமாக யோக நித்திரையில் ஆழ்ந்து சயனித்திருந்தாய் அல்லவோ?
7. காலாக்ய சக்திம் ப்ரளயா வஸானே
ப்ரபோதய இதி ஆதி சதா கிலாதௌ
த்வயா ப்ரஸுப்தம் பரி ஸுப்த சக்தி
ப்ரஜேன தத்ர அகில ஜீவதாம்நா
பொருள்: ஸ்ரீ அப்பனே! உன்னிடம் பலவகையான சக்திகளும், ஜீவன்களும் ப்ரளய காலத்தின் போது ஒடுங்கியிருந்தன. அவற்றில் உள்ள காலம் என்னும் சக்தியிடம் ப்ரளயம் முடிந்த பின்னர் என்னை எழுப்புவாயாக! என்று கட்டளை இட்டியிருந்தாய். இப்படியாக நீ ஆதிசேஷன் மீது நித்திரை கொண்டிருந்தாயாமே என்று பட்டத்ரி கேட்க, அதற்கு பகவானும் ஆமாம் என்று தலையசைத்தான்.
8. சதுர்யுகாணாம் ச ஸஹஸ்ரமேவம்
த்வயி பரஸுப்தே புன: அத்விதீயே
காலாக்ய சக்தி: ப்ரதம ப்ரபுத்தா
ப்ராபோதயத் த்வாம் கில விச்வநாத
பொருள்: விச்வத்திற்கு (உலகிற்கு) நாயகனே! குருவாயூரப்பா! ஆயிரம் சதுர் யுகங்கள் இப்படியாகக் கடந்தன. அதன் பின்னர் கால சக்தியானது விழித்துக் கொண்டது. அப்போது நீ மட்டுமே தனித்து உறங்கிக் கொண்டிருந்தாய். அந்த நேரம் கால சக்தி உன்னை எழுப்பியது அல்லவா?
9 விபுத்ய ச த்வம் ஜலகர்ப்ப சாயிந்
விலோக்ய லோகான் அகிலான் ப்ரலீனான்
தேஷ்வேவ சூக்ஷ்மாத் மதயா நிஜாந்த;
ஸ்திதேஷு விச்வேஷு ததாத த்ருஷ்டிம்
பொருள்: ஸ்ரீ அப்பனே! ப்ரளயத்தின்போது நீரில் நீ சயனம் கொண்டிருந்தாய் நீ விழித்து எழுந்தபோது அனைத்து உலகங்களும் உன்னிடம் மறைந்துள்ளதைக் கண்டாய். உன் உள்ளே மறைந்திருந்த அவற்றின் மீது உனது கனிவான பார்வையை நீ செலுத்தினாய் அல்லவோ? இதற்கு ஸ்ரீ அப்பன் ஆம் என்றார்.
10. தத: தவ்தீயாத் அயி நாபி: அந்த்ராத்
உதஞ்சிதம் கிஞ்சன திவ்ய பத்மம்
நிலீன நி: சேஷ பதார்த்த மாலா
ஸம்க்ஷேப ரூபம் முகுலாய மாநம்
பொருள்: பகவானே! குருவாயூரப்பனே! இப்படியான உனது பார்வைக்குப் பின்னர், உன்னுடைய கொப்பூழில் இருந்து ஓர் அழகான தாமரை மொட்டு வெளித் தோன்றியது. அந்த மொட்டில்தான் அனைத்து உலகங்களும் அவற்றில் உள்ளவையும் சூட்சும ரூபத்தில் மறைந்திருந்தன.
11. த தே தத் அம்போருஹ குட்மலம் தே
கலேபராத் தோய பதே ப்ரரூடம்
பஹி: நிரீதம் பரித: ஸ்புரத்பி:
ஸ்வதாமபி: த்வாந்தம் அலம் ந்யக்ருந்தத்
பொருள்: ஸ்ரீ அப்பனே! அந்த தாமரை மொட்டானது உனது உடலில் இருந்து தோன்றி, நீரின் மேல் வளர்ந்து, தன்னுடைய ஒளியை அனைத்து இடங்களிலும், பரப்பி எங்கும் இருந்த இருளை நீக்கியது. இப்படியாக ப்ரளய இருள் நீங்கியது.
12 ஸம்புல்ல பத்ரே நிதராம் விசித்ரே
தஸ்மிந் பவத் வீர்ய த்ருதே ஸரோஜே
ஸ பத்ம ஜன்மா விதி: ஆவிராஸீத்
ஸ்வயம் ப்ரபுத்தா கிலவேத ராசி:
பொருள்: ஸ்ரீ அப்பனே! நன்றாக மலர்ந்த இதழ்களை உடையதும், வியப்பை அளிக்கக் கூடியதாகவும், உனது சக்தியினால் விளங்கிக் கொண்டுள்ளதாகவும் காணப்பட்ட அந்தத் தாமரை மலரின் மீது - அனைத்து வேதங்களும் (உன் அனுக்ரஹத்தால்) தானாகவே நினைவுக்கு வந்தவனாக பத்மஜன் என்று பெயர் கொண்ட ப்ரும்மா (நான்முகன்) தோன்றினான்.
13 அஸ்மின் பராத்மன் நநு பாத்ம கல்பே
த்வம் இத்தம் உத்தாபித பத்மயோனி:
அனந்த பூமா மம ரோக ராசிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ
பொருள்: குருவாயூரில் என்றும் வாஸம் செய்பவனே! விஷ்ணுவே! இப்படியாக பாத்ம கல்பத்தில் ப்ரும்மாவை நீ படைத்தாய். அளவில்லாத பெருமைகளை உடைய நீ என்னுடைய நோய்கள் அனைத்தையும் நீக்க வேண்டும்.