பதிவு செய்த நாள்
08
ஜூலை
2015
04:07
1. ஸமநுஸ்ம்ருத தாவகாங்க்ரியுக்ம:
ஸ மநு: பங்கஜ ஸம்பவாங்க ஜந்மா
நிஜம் அந்தரம் அந்தராயஹீநம்
சரிதம் தே கதயந் ஸுகம் நிநாய
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! தாமரையில் உதித்த ப்ரும்மாவின் மகனான அந்த மனு, உன்னுடைய திருவடிகளை எப்போதும் த்யானம் செய்து கொண்டும், உன்னுடைய லீலைகள் அடங்கிய சரிதங்களைச் சொல்லிக் கொண்டும், தன்னுடைய காலமான மந்வந்த்ரத்தை எந்தவிதமான தடைகளும் இல்லாமல், இனிமையாகக் கழித்தான்.
2. ஸமயே கலு தத்ர கர்த்தமாக்ய
த்ருஹிணச்சாய பவ ததீய வாசா
த்ருத ஸர்கரஸ: நிஸர்க ரம்யம்
பகவன் த்வாம் அயுதம் ஸமா: நிஷேவே
பொருள்: பகவானே! குருவாயூரப்பா! மந்வந்தர காலத்தில், ப்ரும்மாவின் நிழலில் இருந்து உதித்தவர் கர்த்தமர் என்பவர் ஆவார். அவர் ப்ரும்மாவின் ஸ்ருஷ்டி செய்ய வேண்டும் என்ற கட்டளையை ஏற்று, ஸ்ருஷ்டியில் விருப்பம் கொண்டார். க்ருஷ்ணா! இயற்கையாகவே அழகு கொண்ட உன்னைக் குறித்து பதினாயிரம் ஆண்டு மிகவும் கடுமையாக தவம் புரிந்தார்.
3. கருடோபரி காளமேக கம்ரம்
விலஸத் கேளி ஸரோஜ பாணி பத்மம்
ஹலிதோல் லஸிதாநநம் விபோ த்வம்
வபு: ஆவிஷ்குருஷே ஸ்ம கர்தமாய
பொருள்: குருவாயூரப்பனே! ப்ரபுவே! அப்போது கர்த்தமருக்குக் காட்சி அளித்தாய். எப்படி? நீ கருடன் மீது அமர்ந்து இருந்தாய். உனது திருமேனி நீர் கொண்ட கருமேகம் போல் அழகாக இருந்தது; உனது அழகிய கைகளில் விளையாட்டிற்காக ஒரு தாமரை மலரை வைத்திருந்தாய்; உன்னுடைய முகத்தில் அழகான புன்சிரிப்பு காணப்பட்டது. இப்படியாக நீ கர்த்தமருக்குத் தோன்றினாய் அல்லவா!
4. ஸ்துவதே புலகாவ்ருதாய தஸ்மை
மநுபுத்ரீம் தயிதாம் நவாபி புத்ரீ:
கபிலம் ச ஸுதம் ஸ்வமேவ பச்சாத்
ஸ்வகதிம் ச அப்ய அநுக்ருஹ்ய நிர்கதோபூ;
பொருள்: குருவாயூரப்பனே! உன்னுடைய தரிசனத்தின் மூலம் தனது மயிர்க்கூச்செறிந்து நின்றார் கர்த்தமர். அவருக்கு மநுவின் (ப்ரும்மாவின் மகன்) மகளான தேவஹுதி என்பவளை மனைவியாக அளித்தாய். அவர்களுக்கு ஒன்பது பெண்களை பிறக்க வைத்தாய். (அவர்கள் - கலை, அனசூயை, சிரத்தை, ஹவிற்பூ, கதி, க்ரியை, கியாதி, அருந்ததி மற்றும் சாந்தி) மேலும் உனது அவதாரமாக கபிலர் என்பவர் தோன்றுவார் என்றும் கூறினாய். அத்துடன் கர்த்தமர் மோட்சமும் கிடைக்கப் பெறுவார் என்றும் கூறினாய்.
5. ஸ மநு; சதரூபயா மஹிஷ்யா குண
வத்யா ஸுதயா ச தேவஹுத்யா
பவதீரித நாரதோபதிஷ்ட: ஸமகாத்
கர்த்தமம் ஆகதி ப்ரதீக்ஷம்
பொருள்: குருவாயூரப்பனே! மனுவானவன் நாரத முனிவரால் தூண்டப்பட்டான். (நாரதனை நீயே தூண்டினாய்). இவ்வாறு தூண்டப்பட்ட அவன் தனது மனைவியான சத்ரூபையுடன், நல்ல பண்புகள் நிறைந்தவளான தனது மகள் தேவஹுதி ஆகியோருடன், கர்த்தமரைச் சென்று அடைந்தான்.
6. மனுனா உபஹ்ருதாம் ச தேவஹுதிம்
தருணீ ரத்நம் அவாப்ய கர்த்தம; அஸௌ
பவதர்ச்சன நிர்வ்ருத: அபி தஸ்யாம்
த்ருட தச்ரூஷணயா ததௌ ப்ரஸாதம்
பொருள்: குருவாயூரப்பனே! கர்த்தமர், மனுவால் அழைத்து வரப்பட்ட அவனுடைய பெண் என்னும் இரத்தினத்தை மணந்து கொண்டார். அவர் உனக்குத் தொண்டுகள் புரிவதிலேயே தனது வாழ்க்கையைக் கழித்தார் என்றாலும் தனது மனைவியின் அன்பான பணிவிடைகள் மூலம் அவளிடத்தில் மிக்க அன்பு கொண்டார்.
7. ஸ புன: த்வத் உபாஸன ப்ரபாவாத்
தயிதா காமக்ருதே க்ருதே விமாநே
வநிதா குல ஸங்குல; நவாத்மா
வ்யஹரத் தேவபதேஷு தேவஹுத்யா
பொருள்: குருவாயூரப்பனே! உன்னை ஆராதனை செய்த காரணத்தால் அவருக்கு மிகுந்த யோகபலம் இருந்தது. இதனால் தனது மனைவியின் ஆசைக்கு ஏற்ப உண்டாக்கப்பட்ட விமானத்தில் அமர்ந்து, தேவப் பெண்கள் புடைசூழ, அந்த விமானத்தில் மனைவியுடன் பல இடங்களில் உற்சாமாகத் திரிந்தார்.
8. சத வர்ஷம் அத வ்யதீத்ய ஸ: அயம்
நவ கந்யா: ஸமவாப்ய தன்யரூபா:
வநயாந ஸமுத்ய தேவி காந்தா; ஹிதக்ருத்
த்வஜ்ஜன நோத் ஸுக: ந்யவாத்ஸீத்
பொருள்: குருவாயூரப்பனே! கர்த்தமர் நூறு ஆண்டுகள் கழித்தார். மிகவும் அழகான தோற்றம் உடைய ஒன்பது பெண்களைப் பெற்றார். அதன் பிறகு துறவறம் மேற்கொண்டு காட்டிற்குச் செல்ல விருப்பம் கொண்டார். இப்படி எண்ணம் கொண்ட போதிலும் தன்னுடைய மனைவிக்கு துணையாக இருக்கவும், உன்னுடைய கபில அவதாரம் நிகழவும் அவர் மன விருப்பம் கொண்டு அங்கேயே தொடர்ந்து வசித்தார்.
9. நிஜபர்த்ரு கிரா பவந் நிவேஷா
நிரதாயாம் அத தேவ தேவஹுத்யாம்
கபில: த்வம் அஜாயதா ஜநாநாம்
ப்ரதயிஷ்யந் பரமாத்ம தத்வ வித்யாம்
பொருள்: தேவர்களின் தேவனே! க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இப்படி தன்னுடைய கணவரின் வாக்கின்படி அவருக்கு இடைவிடாமல் தொண்டு புரிந்தாள் (தேவஹுதி). அவள் மூலமாகவே இந்த உலக மக்களுக்கு பரமார்த்த தத்துவத்தைக் குறித்து ஞானத்தை நீ உண்டாக்க விரும்பினாய். அதனால் நீ கபிலராகத் தோன்றினாய் அல்லவா!
10. வனம் ஏயுஷி கர்தமே ப்ரஸன்னே
மதஸர்வஸ்வம் உபாதிசத் ஜனன்யை
கபிலாத்மக வாயுமந்திரேச த்வரிதம்
த்வாம் பரிபாஹி மாம் கதௌகாத்
பொருள்: குருவாயூரில் வாசம் செய்பவனே! ஸ்ரீ அப்பனே! தனது கடமைகளை முழுவதுமாக முடித்த பின்னர் கர்த்தமருக்கு தெளிவான மனம் அமைந்தது. அதன் பின்னர் அவர் காட்டிற்குச் சென்று விட்டார். அதன் பின்னர் மதத்தின் தத்துவங்கள் அனைத்தையும் உனது தாயான தேவஹுதிக்கு நீ கபிலராகத் தோற்றம் கொண்டு உபதேசம் செய்தாய். என்னை பிணிகள் அண்டாமல் நீதான் காப்பாற்ற வேண்டும்.