Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » துருவ சரிதம்
துருவ சரிதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2015
17:29

1. உத்தாநபாத ந்ருபதே: மநுநந்தனஸ்ய
ஜாயா பபூவ ஸுருசி: நிதராம பீஷ்டா
அந்யா ஸுநீதி: இதி பர்த்து: அநாத்ருதா ஸா
த்வாம் ஏவ நித்யம் அகதி: சரணம் கதா அபூத்

பொருள்: மநுவின் மகனான உத்தானபாதன் என்பவனுக்கு இரு மனைவிகள் - ஸுருசி மற்றும் ஸுநிதி. இவர்களில் ஸுருசி என்பவள் மன்னனுக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தாள். ஸுநிதி என்பவள் அவனால் நிராகரிக்கப்பட்டாள். இதனால் புகலிடம் இல்லாத அவள், உன்னையே சரணம் என்று புகுந்தாள்.

2. அங்கே பிது: ஸுருசி புத்ரகம் உத்தமம் தம்
த்ருஷ்ட்வா த்ருவ: கிவ ஸுநீதி ஸுத: அதிரோக்ஷ்யந்
ஆசிக்ஷிபே கில சிசு: ஸுதராம் ஸுருச்யா
துஸ்ஸந்த்யஜா கலு பவத்விமுகை: அஸுயா

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பனே! (ஒரு நாள்) ஸுநீதியின் மகனான துருவன் என்பவன் தன்னுடைய தந்தை மடி மீது ஸுருசியின் மகனான உத்தமன் அமர்ந்திருந்ததைக் கண்டான். இதனால் தானும் அமர. ஆவல் கொண்டான். அப்போது குழந்தை என்றும் பார்க்காமல் அவனை ஸுருசி கீழே தள்ளினாள். உன்னிடம் பக்தி செலுத்தாதவர்கள் தங்கள் பொறாமை குணத்தை விட இயலாது.


3. த்வன்மோஹிதே பிதரி பசியதி தாரவச்யே
தூரம் துருக்தி நிஹத: ஸ கத: நிஜாம்பரம்
ஸா அபி ஸ்வகர்மகதி ஸந்தரணாய பும்ஸாம்
த்வத்பாதம் ஏவ சரணம் சிசவே சசம்ஸ

பொருள்: குருவாயூரப்பனே! உனது மாயையினால் மனைவிக்கு வசப்பட்டவனாக இருந்த உத்தானபாதன், தனது மனைவியின் செயலைத் தடுக்கவில்லை. அவனது கடும் சொற்களால் மனம் உடைந்த துருவன் தன் தாயிடம் சென்றான். அவள் அவனிடம், நமது தீய வினைப்பயன்களைத் தடுக்க பகவான் பாதங்களையே நாட வேண்டும் என்று உபதேசம் செய்தாள் அல்லவா?

4. ஆகர்ண்ய ஸ: அபி பவதர்சன நிச்சிதாத்மா
மாநீ நிரேத்ய நகராத் கில பஞ்சவர்ஷ:
ஸந்த்ருஷ்ட நாரத நிவேதித மந்த்ரமார்க:
த்வாம் ஆரராத தபஸா மது கானநாந்தே

பொருள்: குருவாயூரப்பனே! துருவனுக்கு ஐந்து வயதே நிரம்பியிருந்த போதிலும் தனக்கு நேர்ந்த அவமானத்தைப் பொறுக்க முடியவில்லை. அதனால் தன் தாய் கூறியதுபோல் உன்னைத் த்யானிக்க முடிவு செய்து அந்த நாட்டில் இருந்து வெளியில் கிளம்பினான். நடு வழியில் அவன் நாரதரைக் கண்டான். அவரிடம் இருந்த மந்திரங்களை உபதேசமாகப் பெற்றான். பின்னர் யமுனையின் கரையில் உள்ள மதுவனம் என்ற காட்டிற்குள் சென்று உன்னைக் குறித்து தவம் இயற்றினான் அல்லவா? (நாரதர் உபதேசித்த மந்திரம் - ஓம் நமோ பகவதே வாஸுதேவாய என்பதாகும்)

5. தாதே விஷண்ண ஹ்ருதயே நகரீம் கதேந
ஸ்ரீ நாரதேந பரிஸாந்த்வித சித்த வ்ருத்தௌ
பால: த்வதர்பிதமநா: க்ரம வர்த்திதேந
நிந்யே கடோர தபஸா கில பஞ்சமாஸான்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! துருவனைக் காணாமலும் அவனை அவமதித்ததாலும் அவன் தந்தை மிகவும் மனவருத்தப்பட்டான். அவனுடைய துக்கத்தை நாரத முனிவர் நகரத்திற்குச் சென்று விளக்கினார். சிறுவனான துருவன் உனது மீது முழுவதுமாகத் தனது மனதினைத் திருப்பி, நாளுக்கு நாள் தவம் வளர்ந்த விதமாக, மிகவும் கடுமையான தவத்தை ஐந்து மாதம் மேற்கொண்டான் அல்லவா?

6. தாவத் தபோபல ந்ருச்வஸிதே திகந்தே
தேவார்த்தித: த்வம் உதயத் கருணார்த்ர சேதா:
த்வத்ரூப சித்ரஸ நிலீனமதே: புரஸ்தாத்
ஆவிர்ப்பூவித விபோ கருடாதிரூட:

பொருள்: குருவாயூரப்பனே! துருவனின் மூச்சை அடக்கியவண்ணம் செய்த தவத்தினால் அனைத்துத் திசைகளில் உள்ளவர்களால் மூச்சுவிட இயலவில்லை. அப்படி அவர்கள் திணறியபோது தேவர்கள் உன்னிடம் வந்து வேண்டி நின்றனர். அவர்கள் வேண்டுகோளிலும் துருவனின் தவத்திலும் நீ மனம் நெகிழ்ந்தாய். உனது ஆனந்தமான ரூபத்தைத் தனது உள்ளத்தில் தரித்திருந்த துருவன் முன்பாக நீ கருடன் மீது அமர்ந்தபடி தோன்றினாய் அல்லவா?

7. த்வத் தர்சன ப்ரமத பார தரங்கிதம் தம்
த்ருக்ப்யாம் நிமக்னமிவ ரூபரஸாயநே தே
துஷ்டூஷமாணம் அவகம்ய கபோலதேசே
ஸம்ஸ்புருஷ்ட வாநஸி தரேண ததா ஆதரேண

பொருள்: குருவாயூரப்பனே! உனது தரிசனம் கிடைக்கப் பெற்ற துருவன் ஆனந்தத்தினால் மயங்கி நின்றான். உனது அமிர்தம் போன்ற உருவத்தைக் கண்ட அவன் கண்களால் அதில் மூழ்கினான். உன்னைத் துதிக்கவும் எண்ணினான். (ஆனால் அவனுக்கு எப்படித் துதிப்பது என்று புரியவில்லை) இதனை உணர்ந்த நீ உனது பாஞ்சஜன்யத்தால் (சங்கு) அவனது கன்னங்களை மெதுவாக அன்புடன் தொட்டாய் அல்லவா?

8. தாவத் விபோத விமலம் ப்ரணுவந்தம் ஏநம்
ஆபா ஷதா: த்வம் அவகம்ய ததீய பாவம்
ராஜ்யம் சிரம் ஸமனுபூய பஜஸ்வ பூய;
ஸர்வோத்தரம் த்ருவ பதம் விநிவ்ருத்தி ஹீநம்

பொருள்: குருவாயூரப்பனே! (வேதவடிவான உனது சங்கு அவனைத் தொட்ட காரணத்தினால்) துருவனுக்கு ஞானம் பிறந்து தனது மாசுகள் நீங்கப்பெற்று உன்னைத் துதித்தான். அவன் உள்ளம் அறிந்த நீ (அவன் காட்டிற்கு வரும்போது நாடாளும் அரசனாக வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தான்) அவனிடம், துருவனே! நீ நன்றாக ராஜ்ஜியத்தை ஆள்வாயாக! அதன் பின்னர் மறுபிறவி என்பது எடுத்துத் திரும்பி வராமல் உள்ள துருவபதம் என்பதை நீ அடைவாயாக! என் கூறினாய் அல்லவா?

9. இத்யூசுஷி த்வயி கதே ந்ருப நந்தன: அஸென
ஆநந்திதாகில ஜன: நகரீம் உபேத:
ரேமே சிரம் பவதநுக்ரஹ பூர்ணகாம;
தாதே கதே ச வநமாத்ருத ராஜ்யபர:

பொருள்: குருவாயூரப்பனே! இப்படியாக அவனுக்கு நல்வார்த்தைகள் கூறியபின் நீ சென்றுவிட்டாய். அதன் பின்னர் துருவன் மகிழ்வுடன் தன்னை வரவேற்ற மக்களைக் கொண்டவனாக தனது நாட்டிற்குத் திரும்பினான். உனது க்ருபையால் அவனுக்கு விருப்பப்பட்டவை அனைத்தும் நிறைவேறின. அவன் தந்தை தவம் செய்ய காட்டிற்குப் புறப்பட்டார். அப்போது துருவன் அரசாட்சியை ஏற்று நீண்ட காலம் அனுபவித்தான்.

10. யக்ஷேண தேவ நிஹதே புன: உத்தமே அஸ்மிந்
யக்ஷை: ஸ யுத்த நிரத: விரத: மனூக்த்யா
சாந்த்யா ப்ரஸன்ன ஹ்ருதயாத் தனதாத் உபேதாத்
த்வத் பக்தி மேவ ஸுத்ருடாம்  அவ்ருணோத் மஹாத்மா

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஒரு முறை காட்டிற்கு வேட்டையாடச் சென்ற துருவனின் சகோதரன் (இளைய தாயின் மகன்) உத்தமனை யக்ஷன் ஒருவன் கொன்று விட்டான். அப்போது இதனைக் கேள்விப்பட்ட துருவன் யக்ஷர்களுடன் போர் புரியத் தொடங்கினான். ஆனால் அப்போது மனு துருவனிடம் தோன்றி போரை நிறுத்துமாறு அறிவுரை செய்தவுடன் போரை நிறுத்தினான். இதனைக் கண்டு மனம் மகிழ்ந்த யக்ஷர்களின் அரசனான குபேரன் துருவனிடம் வந்தான். அவனிடம் துருவன் என்றும் நீங்காமல் உள்ள பகவத் பக்தியே வேண்டும் என்று கேட்டான்.

11. அந்தே பவத்புருஷநீத விமானயாத:
மாத்ராஸமம் த்ருவபதே முதித: அயம் ஆஸ்தே
ஏவம் ஸ்வருப்தயஜன பாலன லோலதீ: த்வம்
வாதாலயாதிப நிருத்தி மம ஆமயௌகான்

பொருள்: குருவாயூரின் அதிபதியே! குருவாயூரப்பா! தனது ஆட்சியின் முடிவில் உனது தூதர்களால் அழைத்து வரப்பட்ட விமானத்தில் ஏறிக்கொண்டு, தனது தாயுடன் துருவ மண்டலத்தில் என்றும் ஆனந்தமாக உள்ளான். இப்படியாக உனது அடியார்களைக் காக்கும் மனம் படைத்த நீ, என்னுடைய வியாதிகளை நீக்க வேண்டும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar