பதிவு செய்த நாள்
10
ஜூலை
2015
10:07
திருவண்ணாமலை:பெரணமல்லூர் அருகே, கோவில் இடத்தில், 10 அடி ஆழத்திற்கு திடீரென, பள்ளம் ஏற்பட்டதால், பொதுமக்கள் பீதியடைந்தனர். பெரணமல்லூர் அடுத்த, வயலூரில், அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில், உள்ள காலி இடத்தில், நேற்று காலை திடீரென, 10 அடி ஆழம், 5 அடி அகலத்தில் பள்ளம் ஏற்பட்டது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். இது குறித்து அவர்கள், வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் யாரும், இதுவரை அந்த பள்ளத்தை பார்க்க வரவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.