Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி திரவுபதியம்மன் கோவில் ... கம்மாபுரம் வீரனார் கோவிலில் சிறப்பு வழிபாடு! கம்மாபுரம் வீரனார் கோவிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாடலீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி பரிகார யாகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாடலீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி பரிகார யாகம்!

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2015
10:07

கடலூர்: கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் குரு தட்சணாமூர்த்திக்கு பரிகார யாகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. நவக்கிரகங்களில்  ஒன்றான குரு தட்சணாமூர்த்தி கடக ராசியில் இருந்து கடந்த 5ம் தேதி இரவு 11:02 மணிக்கு சிம்ம ராசிக்கு இடம் பெயர்ந்தார். குரு பெயர்ச்சியைத்  தொடர்ந்து முதல் வியாழக் கிழமையான நேற்று முன்தினம் மாலை கடலூர், திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பாடலீஸ்வரர் கோவிலில் பரிகார யாகம்  நடந்தது. அதனையொட்டி கோவில் சங்கு மண்டபத்தில் மாலை 6:00 மணிக்கு கலசம் வைத்து பூஜை நடந்தது. தொடர்ந்து 96 வகையான மூலிகைப்  பொருட்கள், பழ வகைகள், நவதானியங்கள், பாதாம் உள்ளிட்ட பருப்புகள் மற்றும் அன்ன ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர் தட்சணாமூர்த்திக்கு  பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பூர்ணாகுதியைத் தொடர்ந்து  கலச தீபாராதனை, யாத்ரா  தானத்தையடுத்து, புனித நீர் அடங்கிய கலசம் புறப்பாடாகி தட்சணாமூர்த்திக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. யாகம் மற்றும்  பூஜைகளை நாகராஜ குருக்கள் நடத்தினார். பரிகார யாகத்தில் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி, செயல் அலுவலர் ரத்தினாம்பாள்  மற்றும் உபயதாரர்கள் பங்கேற்றனர்

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar