புதுச்சேரி: லாஸ்பேட்டை திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 21ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை காலை திருமஞ்சனம், இரவு வீதியுலா நடந்தது. நேற்று 10ம் தேதி பகல் 12 மணிக்கு படுகளம், மாலை தீமிதித்தல் நடந்தது. அம்மன் திருத்தேரிலும், கிருஷ்ணன் ரத்தத்திலும், அர்ச்சுனர் தங்க விமானத்திலும் வீதியுலா நடந்தது. இன்று இரவு மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவல் குழு மற்றும் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.