உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை சுற்றியுள்ள பல்வேறு சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு நடந்தது.எலவனாசூர்கோட்டை ஸ்ரீகிராம அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆனி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு நடந்தது. நேற்று மாலை 4: 30 மணி முதல் பால், தயிர், சந்தனம், விபூதி, பன்னீர், இளநீர் உள்ளிட்ட அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள் பாலித்தார்.இதேபோல் உளுந்தூர்பேட்டை ஸ்ரீகைலாசநாதர் சுவாமி கோவில், ஆதனூர் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் சுவாமி கோவில், திருநாவலூர் ஸ்ரீமனோன்மணி உடனுறை பக்த ஜனேஸ்வரர் கோவில், எ.குமாரமங்கலம் திருபுவனாதீஸ்வரர் கோவில் ஆகியவற்றிலும், பிரதோஷ சிறப்பு அபிஷேகம் நடந்தது.