திருவாரூர்: திருவாரூர் அருகே தண்டளை மேப்பாடியில் ஸ்ரீசெல்வவினாயகர், பிடாரி அம்மன் கோவில்களில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. திருவாரூர் அருகே தண்டளை ஊராட்சி மேப்பாடியில் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு செல்வவினாயகர் மற்றும் அருள்மிகு பிடாரியம்மன் கோவில்கள் உள்ளது. இக்கோவில்களை அப்பகுதியினர் விழா குழுவினர் அமைத்து கோவி ல்களை புதுப்பித்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளைத்தொடர்ந்து கடந்த 11 ம் தேதி காலை 8.30 மணிக்கு அனுக்ஞை, தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல் பம், கணபதி ேஹாமத்துடன் பல்வேறு பூஜைகள் துவங்கியது.12 ம் தேதி கா லை 8.30 மணிக்கு ஆசார்ய விசேஷ சாந்தியுடன் இரண்டாம் கால யாக சாலை பூஜை துவங்கியது. பல்வேறு பூஜைகள் இரவு 8.30 மணிவரை நடந்த பூஜையில் மூன்றாம் கால யாக பூஜை நிறைவடைந்தது. நேற்று 13ம் தேதி காலை 7.00 மணிக்கு நான்காம் காலயாக பூஜை துவங்கியது. பின்னர் பிம்மசுத்தி ரஷாபந்தனம், 8.00 மணிக்கு நாடி சந்தான ஸபர் சாஹூதி பூஜைகள், 8.30 மணிக்கு திரவியஹூதி, 9.00 மணிக்கு பூர்ணா ஹூதி தீபார தனையும், 9.15 மணிக்கு யாத்ராதானத்துடன் செல்வ வினாயகர் கடம் புறப்பா டும் துவங்கி 9.30 மணிக்கு செல்வ வினாயகருக்கு விமானத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின் காலை 9.45 மணிக்கு யாக சாலையில் இருந்து பிடாரியம்மனுக்கு கடம் புறப்பாடு துவங்கி 10.00 மணிக்கு ஸ்ரீ பிடாரியம்மன் விமானத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஆயிர கணக்கா னவர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்க ப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர்கள் செய்திருந்தனர்.