"நோன்பை வெற்றிகரமாக முடிக்கும் நேரம் நெருங்கி விட்டது. அல்லாஹ் நமக்கு எதை அனுமதித்திருக்கிறான், எதை விலக்கியுள்ளான் என்பதை இந்த நாட்களில் தெரிந்து கொண்டோம். "இறைவழியில் போர் புரிவதற்காக விழித்திருந்த கண்கள், இறைவனின் பயத்தால் கண்ணீர் வடித்த கண்கள், எவற்றைப் பார்க்கக்கூடாது என்று மார்க்கத்தால் தடைவிதிக்கப்பட்டதோ அவற்றைப் பார்க்காத கண்கள்... இவையெல்லாம் நரகத்தைப் பார்க்காது” என்கிறார் அண்ணல் நாயகம். அத்துடன், "தீர்ப்பு நாளில் அதிகாரிகளையும், அநியாயக்காரர்களையும் ஸிராத்தல் முஸ்தகீம் பாலத்தின் மீது வானவர்கள் கொண்டு நிறுத்துவார்கள். இவர்களை நரகத்தில் தள்ளுங்கள் என்று இறைவனின் ஆணை பிறக்கும்,” என்றும் சொல்கிறார். இதன்படி, உலகில் அநியாய தீர்ப்புச் செய்தவர், லஞ்சம் வாங்கிக் கொடுமை செய்தவர்களெல்லாம் நரகத்தில் தள்ளப்படுவார்கள். இதுபோன்ற கருத்துக்களை மனதில் கொண்டு, ரமலான் மாதத்தில் கற்றுக்கொண்ட நல்லவற்றையெல்லாம் திருப்பிப் பார்ப்போம். இறுதி வரை கடைபிடிப்போம்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50 மணி நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.23 மணி.