விருத்தாசலம்: விருத்தாசலம் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள தேவரகசிய ரோஜா மாதா கோவிலில் தேர் திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு, கடந்த 11ம் தேதி மாதா கோவிலில் கொடியேற்றம் நடந்தது. நேற்று தேர் திருவிழாவையொட்டி, புனித பாத்திமா அன்னை ஆலய பங்கு தந்தை ஆ÷ ராக்கியதாஸ் தலைமையில், காலை 8:00 மணிக்கு சிறப்புத் திருப்பலி நடந்தது. 9:00 மணிக்கு அலங்கரித்த தேவரகசிய ரோஜா மாதா தேரில் பவனி வந்து அருள்பாலித்தார். பங்குத்தந்தை அருள்வளன், பாத்திமா பள்ளி முதல்வர் ஆரோக்கியமேரி உட்பட பலர் பங்கேற்றனர்.