பதிவு செய்த நாள்
15
ஜூலை
2015
12:07
கோதாவரி புஷ்கரம் எனப்படும், கோதாவரி நதியில் புனித நீராடும் சடங்கு, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்த முறை, மகாபுஷ்கரமாக கருதப்படுகிறது. இது, 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் வரும். ஜோதிட முறைப்படி, சிம்ம ராசியில் வியாழன் இருக்கும் போது, மகாபுஷ்கரமாக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும், கும்பமேளாவாக, வட மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. ஓராண்டு வரை நீடிக்கும் இந்த விழா, வட மாநிலங்களில், ஹரித்வார், அலகாபாத், நாசிக் மற்றும் உஜ்ஜையினி ஆகிய இடங்களில் விமரிசையாக நடக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில், திரியம்பகேஷ்வரர் கோவிலிலும், கோதாவரி நதியில் மகாகும்ப மேளா துவங்கியது. இங்குள்ள நதியில், சாதுக்களும், சன்னியாசிகளும் புனித நீராடியதை அடுத்து, நேற்று காலை பொதுமக்களும் அனுமதிக்கப்பட்டனர். நாசிக் திரியம்பகேஷ்வரர் மகாகும்ப மேளாவில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.