ஆத்தூர்:சடையாண்டி கோயில் ஆடி அமாவாசை திருவிழாவிற்கான கொடியேற்றம் நடந்தது. அக்கரைப்பட்டி ஊராட்சியில் மேற்கு தொடர்ச்சி மலை குன்றில் சடையாண்டி கோயில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஆத்தூர் மற்றும் அக்கரைப்பட்டி கிராமத்தினர் இடையே திருவிழா தொடர்பாக கருத்து வேறுபாடு எழுந்தது. அக்கரைப்பட்டியை சேர்ந்தவர்கள் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். ஐகோர்ட் கிளை சில நிபந்தனைகளுடன் விழா நடத்த உத்தரவிட்டது. இதன்படி அமாவாசை தினமான நேற்று (ஜூலை 15) காலை ஒன்பது மணி முதல் 10.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறும் என தக்கார் வேல்முருகன் தகவல் தெரிவித்தார். நேற்று காலை 9.30 மணியளவில் கொடியேற்றம் நடந்து முடிந்தது. இதன்பிறகு அங்கு வந்த ஆத்தூர் கிராமத்தினர், தங்களை புறக்கணித்து கொடியேற்றத்தை நடத்தியது தவறு என்றனர். 10.30 மணி வரை கொடியேற்றத்திற்கான கால அவகாசம் உள்ள நிலையில், அவசரமாக கொடியேற்றியதாக புகார் தெரிவித்தனர். செம்பட்டி இன்ஸ்பெக்டர் பாலகுமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.