புதுச்சேரி கோவில் திருப்பணிக்கு நிதியுதவி வழங்கல்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2015 12:07
புதுச்சேரி: மூன்று கோவில்களின் திருப்பணிக்கு ஓம்சக்திசேகர் எம்.எல்.ஏ., நிதியுதவி வழங்கினார்.நெல்லித்தோப்பு தொகுதியில், குயவர்பாளையம் முத்துக்குமாரசாமி கோவில், காராமணிக்குப்பம் சிவசுப்ரமணியர் கோவில், பெரியார் நகர் நாகமுத்துமாரியம்மன் கோவில் ஆகியவை முழுவதுமாக இடிக்கப்பட்டு, திருப்பணிகள் நடந்து வருகிறது.முத்துக்குமாரசாமி கோவில் திருப்பணிக்காக 1 லட்சம் ரூபாய், சிவசுப்ரமணியர் கோவிலுக்கு 50 ஆயிரம் ரூபாய், நாகமுத்துமாரியம்மன் கோவிலுக்கு 50 ஆயிரம் ரூபாயை, தனது சொந்த நிதியில் இருந்து ஓம்சக்திசேகர் எம்.எல்.ஏ., கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் திருப்பணி கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.