பதிவு செய்த நாள்
17
ஜூலை
2015
12:07
சேலம்: சேலத்தில், பிரசித்தி பெற்ற ஜகந்நாத் யாத்திரை நிகழ்ச்சி, இஸ்கான் சார்பில், நாளை நடக்கிறது.ஒடிஸா மாநிலம், பூரி நகரில் மட்டுமே கொண்டாடப்பட்டு வரும் ரதயாத்திரை, தற்போது, உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. நாளை இஸ்கான் சார்பில், சேலத்தில் ரத யாத்திரை நிகழ்ச்சி நடக்கிறது. தேர்திருவிழா போல் நடக்கும், இந்த ரத யாத்திரையில், பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பர்.சேலம் மாநகர மக்களின் நன்மைக்காக, ஜகந்நாதர் ரதயாத்திரை பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது. மாலை, 2 மணிக்கு மேல், பகவான் ஜகந்நாதர் ரதமானது, சேலம் பட்டைக்கோவிலில் துவங்கி, முதல் அக்ரஹாரம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், நான்கு ரோடு, புதிய பஸ் ஸ்டாண்ட், ஐந்து ரோடு வழியாக வந்து, சோனா கல்லூரி வளாகத்தில், மாலை, 6 மணிக்கு வந்தடைகிறது.அதன்பின், அங்குள்ள கலையரங்கில், மாலை, 6.30 மணி முதல், இரவு, 8.30 மணி வரை, ஆன்மிக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இஸ்கான் ஸ்தாபக ஆச்சாரியார் பக்திவேதாந்த ஸ்வாமி நேரடி சீடரான, அமெரிக்காவைச் சேர்ந்த ஹரிபாதபிரபு கலந்து கொள்கிறார்.