கடலூர்: குமாரப்பேட்டை வேம்புலி அம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. கடலூர் குமாரபேட்டை வேம்புலி அம்மன் கோவிலில் உலக அமைதிக்காகவும், ஊர் செழிப்பாக இருக்கவும், குடும்பம் சிறப்பாக இருக்கவும் திருவிளக்கு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையொட்டி நேற்று காலை 10:00 மணிக்கு கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. மாலை 108 திரு விளக்கு பூஜை நடந்தது. மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.