பதிவு செய்த நாள்
18
ஜூலை
2015
11:07
ஊத்துக்கோட்டை, :பெரியபாளையம் பவானியம்மன் கோவிலுக்கு, ஆடி மாத வெள்ளிக்கிழமையை ஒட்டி, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள்,
பாதயாத்திரையாக சென்றனர்.ஆடி மாதம் பிறந்ததையடுத்து, பெரியபாளையம் பவானியம்மன் கோவிலுக்கு, ஊத்துக்கோட்டை, பாலவாக்கம், தண்டலம், ஆரணி, கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், பாதயாத்திரையாக சென்று அம்மனை தரிசனம் செய்தனர்.சிலர், கூழ் ஊற்றியும், வேப்பிலை ஆடை அணிந்தும் நேர்த்திக் கடனை செலுத்தினர்.இதேபோல், ஊத்துக்கோட்டை செல்லியம்மன் கோவில், புற்றுக்கோவில், அங்காளம்மன், எல்லையம்மன், கன்னியம்மன், பாலவாக்கம் செங்காளம்மன் கோவில்கள் மற்றும் சுற்றியுள்ள அம்மன் கோவில்களில், விசேஷ பூஜைகள் நடந்தன.இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.