ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே வேர்க்காடு கிராமத்தில் உள்ள புனித சந்தியாகப்பர் ஆலய நவநாள் திருவிழா, நேற்று முன்தினம் துவங்கியது. இவ்விழாவிற்காக சிவகங்கை மறை மாவட்ட பொருளாளர் மைக்கேல்ராஜ் தலைமையில் நடந்த சிறப்பு திருப்பலியுடன், கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, சர்ச் வளாகத்தில் நவநாள் திருப்பலி பூஜைகள் நடைபெறுகிறது. வரும் ஜூலை 24 மாலை விழா திருப்பலி முடிந்ததும், இரவில் அலங்கார தேரில் சந்தியாகப்பர் சிலை யுடன் தேர்பவனி நடைபெறுகிறது. ஜூலை 25 ல், சிறப்பு திருப்பலியில் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த மும்மதத்தினரும் பங்கேற்பர். ஏற்பாடுகளை பாதிரியார் ராஜ ஜெகன் மற்றும் தண்ணீர் ஊற்று, அரியாங்குண்டு, தென்குடா விழா குழுவினர் செய்து வருகின்றனர்.