பதிவு செய்த நாள்
20
ஜூலை
2015
11:07
செங்கல்பட்டு:மணப்பாக்கம் கன்னியம்மன் கோவிலில், அடிப்படை வசதிகள் செய்துதராததால், பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.செங்கல்பட்டு அடுத்த, மணப்பாக்கம் கிராமத்தில் பாலாற்றங்கரையில் கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும், ஆடித்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, கடந்த, 17ம் தேதி முதல், ஆடி வெள்ளி துவங்கி, வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்களுக்கு, தண்ணீர் வசதி மற்றும் கழிப்பறை வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால், கோவிலுக்கு வரும் பெண் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.கோவிலில் அடிப்படை வசதிகளை செய்துதர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.