சிங்கம்புணரி: சிங்கம்புணரி கோயில்களில் ஆடி பிறப்பை யொட்டி சிறப்பு பூஜை நடந்தது. காசியாபிள்ளை நகர் குபேர கணபதி கோயிலில் மூலவர் கணபதி, ராகு, கேது, அனுமன், துர்க்கை, தெட்சிணா மூர்த்தி, பைரவருக்கு பால், பன்னீர் சந்தன அபிஷேகம் நடந்தது. மாலையில் பெண்கள் 108 திருவிளக்கு பூஜை செய்தனர்.வேங்கைப்பட்டி வீரமுக்கி அம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, திருவிளக்கு பூஜை,அன்னதானம் நடந்தது எஸ்.வி.மங்கலம் ருத்ரகோடீஸ்வரர், ஆத்மநாயகி அம்மன் கோயிலில் சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடந்தது. பெண்கள் 308 திருவிளக்கு வைத்து பூஜை செய்தனர்.