Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » மஹாலக்ஷ்மி அவதாரம்
மஹாலக்ஷ்மி அவதாரம்
எழுத்தின் அளவு:
மஹாலக்ஷ்மி அவதாரம்

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2015
03:07

1. கரலம் தரலானலம் புரஸ்தாத்
ஜலதே: உத்விஜகாலே கால கூடம்
அமரஸ்துதிவாத மோத நிக்ந:
கிரிச: தத் நிபபௌ பவத் ப்ரியார்த்தம்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அப்போது அந்தக் கடலில் இருந்து பெரிதாக எரிகின்ற நெருப்புடன் கூடிய காலகூடம் என்று அழைக்கப்படும் விஷம் வெளி வந்தது. இதனை நீக்குமாறு அனைவரும் சிவனை வேண்டினர். அவரும் அவர்கள் துதிகளில் மகிழ்ந்து, உன்னுடைய மகிழ்வுக்காக அந்த விஷத்தை முழுவதுமாக உட்கொண்டார் அல்லவா? (ஸ்ரீஅப்பன் ஆம் என்று தலையசைத்தான்.)

2. விமதத்ஸு ஸுராஸுரேஷு ஜாதா ஸுரபி:
தாம் ருஷிஷு ந்யதா: த்ரிதாமந்
ஹயரத்னம் அபூத் அத இபரத்னம்
த்யுதரு: அப்ஸரஸ்ஸ்ச ஸுரேஷு தானி

பொருள்: குருவாயூரப்பனே! ப்ரும்மா, சிவன், விஷ்ணு ஆகிய மூவரும் ஆக உள்ளவனே! கடலை மேலும் கடைந்தபோது அதில் இருந்து காமதேனு என்ற பசு தோன்றியது. அதனை நீ முனிவர்களிடம் அளித்தாய். பின்னர் மிகவும் சிறந்த குதிரையான உச்சைஸ்ரவானி தோன்றியது. அடுத்த சிறந்த யானையான ஐராவதம் தோன்றியது. தொடர்ந்து கற்பக விருட்சமும், தேவலோக அப்சரஸ்களும் தோன்றின. இவற்றை நீ தேவர்களுக்குக் கொடுத்தாய்.

3. ஐகதீச பவத்பரா ததாநீம்
கமநீயா கமலா பபூவ தேவீ
அமலாம் அவலோக்ய யாம் விலோல:
ஸகலோபி ஸ்ப்ருஹயாம் பபூவ லோக:

பொருள்: அனைத்து உலகிற்கும் தலைவனே! குருவாயூரப்பனே! அடுத்து மனம் வருந்திக் கொண்டிருந்த அனைத்து உலகங்களும் விரும்பும் வண்ணம் களங்கம் சிறிதும் இல்லாதவளான மஹாலக்ஷ்மி தோன்றினாள். மிகவும் அழகுடனும், உன்னிடமே தனது மனதை வைத்தவளுமான மஹாலக்ஷ்மி தோன்றினாள்.

4. த்வயி தத்தஹ்ருதே ததைவ தேவ்யை
த்ரிதசேந்த்ர: மணிபீடிகாம் வ்யதாரீத்
ஸகலோப ஹ்ருதாபிஹேச நீயை:
ருஷய: தாம் ச்ருதிகீர்ப்பி: அப்யஷிஞ்சன்

பொருள்: குருவாயூரப்பனே! உன்னிடத்தில் தனது மனதை பறிகொடுத்தவளான மஹாலக்ஷ்மிக்கு, அவள் தோன்றியவுடனேயே, இந்திரன் ரத்னங்களால் செய்யப்பட்ட பீடம் ஒன்றை அளித்தான். பல புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட நீரினால் முனிவர்கள் வேதம் ஓதியபடி அவளை நீராட்டினர்.

5. அபிஷேக ஜலாநுபாதி முக்த
த்வதபாங்கை: அவபூஷிதாங்க வல்லீம்
மணிகுண்டல பீதசேல ஹார ப்ரமுகை:
தாம் அமராதய: அந்வபூஷன்

பொருள்: குருவாயூரப்பனே! அபிஷேகம் செய்யப்பட்ட நீர் மட்டும் அல்லாது உன்னுடைய கடைக்கண் பார்வையும் அவள் மீது விழுந்தது. மிகவும் அழகான கொடி போன்ற மெல்லிய உடல் கொண்ட மஹா லக்ஷ்மியை தேவர்கள் -ரத்தினங்கள் பதித்த குண்டலங்கள், மாலைகள், மஞ்சள் ஆடை போன்றவற்றால் அலங்காரம் செய்தனர்.

6. வரணஸ்ரஜம் ஆத்த ப்ருங்க நாதாம்
தததீ ஸா குசகும்ப மந்தயாநா
பதசிஞ்ஜித மஞ்ஜு நூபுரா த்வாம்
கலித வ்ரீல விலாஸம் ஆஸஸாத

பொருள்: குருவாயூரப்பா! அப்படிப்பட்ட மஹாலக்ஷ்மி தனது கைகளில் வண்டுகள் ரீங்காரம் செய்யும் படியான, ஸ்வயம்வர மாலையைக் கொண்டு வந்தாள். தனது கும்பம் போன்ற ஸ்தனங்களின் பாரத்தால் மெதுவாக நடந்து, தன் கால்களில் உள்ள சதங்கை சப்தமிடும்படி நடந்து, மிகுந்த நாணத்துடன் நீ உள்ள இடத்திற்கு வந்தாள்.

7. கிரிச த்ருஹிணாதி ஸர்வ தேவாந்
குணபாஜ: அபி அபிமுக்த தோஷலேசாந்
அவம்குச்ய ஸதா ஸர்வரம்யே
நிஹிதா த்வயி அநயாபி திவ்யமாலா

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உத்தமமான குணங்கள் கொண்ட ப்ரும்மா, சிவன் முதலானோர் முற்றிலுமாக தோஷம் இல்லாதவர்கள் அல்லர் என்று உணர்ந்தாள். அனைவரும் விரும்பும் அனைத்துத் திருக்கல்யாண குணங்களும் பொருந்திய உன்னிடத்தில் அந்த மஹாலக்ஷ்மியால், அந்த உயர்ந்த மாலை அணிவிக்கப்பட்டது அல்லவா?

8. உரஸா தரஸா மமானித ஏனாம்
புவநாநாம் ஜனனீம் அனன்ய பாவாம்
த்வதுரோ விலஸத்ததீக்ஷண ஸ்ரீ
ப்ரிவ்ருஷ்ட்யா பரிபுஷ்டமாஸ விச்வம்

பொருள்: குருவாயூரப்பனே! அனைத்து உலகங்களுக்கும் தாய் போன்று விளங்குபவளும், உன்னைத் தவிர வேறு யார் மீதும் பற்று இல்லாதவளும் ஆகிய அந்த மஹாலக்ஷ்மியை உனது திருமார்பில் எடுத்து வைத்துக் கொண்டு அவளைப் பெருமைப்படுத்தினாய். உன்னுடைய மார்பில் அமர்ந்துள்ள அந்து ஸ்ரீதேவியால் இந்த உலகம் அவளது கடாட்சம் என்ற மழையில் நனைகிறது.

9. அதிமோஹன விப்ரமா ததாநீம்
மதயந்தீ கலு வாருணீ நிராகாத்
தமஸ: பதவீம் அதாஸ்த்வம் ஏநாம்
அதிஸம்மானனயா மஹாஸுரேப்ய:

பொருள்: குருவாயூரப்பனே! அதன் பின்னர் பார்ப்பவர்கள் மனம் கவரும்படி செயல்களைச் செய்பவளும், போதையை உண்டாக்குபவளும் ஆகிய வாருணீதேவி (இவள் கண்களுக்கு அதிபதி தோன்றினாள்.) தாமஸ குணமான அறிவின்மைக்கு இருப்பிடமான இவளை நீ அசுரர்களுக்கு அளித்தாய்.

10. தருணாம்புத ஸுந்தர: ததா த்வம்
நநு தன்வந்திரி: உத்தித: அம்புராசே:
அம்ருதம் கலசே வஹந் கராப்யாம்
அகிலார்த்திம் ஹர மாருதாலயேச

பொருள்: குவாயூரப்பனே! அப்போது நீ மழைநீர் கொண்ட மேகம் போன்ற நிறம் உடையவனும், கைகளில் அமிர்தம் உள்ள குடந்தை ஏந்தியும் தன்வந்தரி பகவனாக வெளியில் வந்தாய். என்னுடைய அனைத்து நோய்களையும் நீயே நீக்க வேண்டும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar