Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » பரசுராம அவதாரம்
பரசுராம அவதாரம்
எழுத்தின் அளவு:
பரசுராம அவதாரம்

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2015
05:07

1. அத்ரே: புத்ரதயா புரா த்வம்
அநஸுயாயாம் ஹி தத்தாபிதோ
ஜாத: சிஷ்ய நிபந்த தந்த்ரித மநா:
ஸ்வஸ்த்தச் சரந் காந்தயா
த்ருஷ்டோ பக்ததமேந ஹேஹய
மஹீபாலேந தஸ்மை வராந்
அஷ்ட ஐச்வர்ய முகாந் ப்ரதாய
ததித ஸ்வேநைவ சாந்தே வதம்

பொருள்: குருவாயூரப்பனே! முன்பு ஒரு சமயம் அத்ரி முனிவருக்கும் அனஸுயா என்னும் அவர் மனைவிக்கும் தத்தர் என்னும் பெயர் கொண்டவனாகப் பிறந்தாய் அல்லவா? பல சீடர்கள் உன்னை அணுகவே, அவர்களின் தொடர்பு உன் த்யானத்திற்கு இடையூறாக உள்ளது என்று எண்ணி, உனது மனைவியுடன் பல இடங்களில் திரிந்தாய். சிறந்த பக்திமானாகிய ஹேஹய நாட்டு மன்னன் கார்த்தவீர்யார்ஜுனன் உன்னை வணங்கினான். உன்னிடம் இருந்து எட்டு வகையான செல்வங்களைப் பெற்றான். அவனை யமனால் கொல்ல முடியாது என்பதால், நீ மட்டுமே அவனைக் கொல்ல முடியும் என்று வரம் பெற்றான்.

2. ஸத்யம் கர்த்தும் அதார்ஜுநஸ்ய
ச வரம் தச்சக்தி மாத்ராநதம்
ப்ரஹ்மத்வேஷி ததாகிலம் ந்ருபகுலம்
ஹந்துஞ்ச பூமேர்பரம்
ஸஞ்ஜாதோ ஜமதக்னிதோ
ப்ருகுகுலே த்வம் ரேணுகாயாம் ஹரே
ராமோ நாம தத் ஆத்மஜேஷ்வவரஜ:
பித்ரோரதா: ஸம்மதம்

பொருள்: குருவாயூரப்பனே! உனது கைகளால்தான் கார்த்தவீர்யார்ஜுனனுக்கு மரணம் என்பதை உண்மை ஆக்குவதற்காகவும், அவனுக்குப் பயந்து ப்ராமணர்களைத் தூஷிக்கின்ற அரசர்கள் பூமிக்குப் பாரமாக உள்ளனர். என்றும் நீ எண்ணினாய். அந்த அரச குலங்களை அழிப்பதற்கும் நீ முடிவு செய்தாய். ப்ருகு முனிவரின் குலத்தில் உதித்த ஜமத்க்னி முனிவருக்கும் ரேணுகா தேவிக்கும், அவர்கள் கடைசி மகனாக நீ பிறந்தாய். பரசுராமன் என்று பெயர் கொண்டு, உன் பெற்றோர்களை மகிழ வைத்தாய்.

3. லம்தாம்நாய கணச்சதுர்தசவயா
கந்தர்வராஜே மநாக்
ஆஸக்தாம் கில மாதரம் ப்ரதி பிது:
க்ரோதாகுல: ஆஜ்ஞயா
தாதாஜ்ஞாதிகஸோதரை: ஸமம் இமாம்
சித்வாத சாந்தாத் பிது:
தேஷாம் ஜீவநயோகமாபித வரம்
மாதா ச தேதாத் வராந்

பொருள்: குருவாயூரப்பனே! உனது பதினான்காவது வயதில் அனைத்து வேத பாடங்களையும் கற்றாய். ஒரு நாள் ஒரு கந்தர்வனிடம் உனது தாய் ரேணுகாதேவி சிறிது மனம் சஞ்சலம் கொண்டு விட்டாள். இதனால் உனது தந்தை கோபம் கொண்டார். உனது சகோதரர்களிடம் உனது தாயைக் கொன்று விடுமாறு உத்தரவிட்டார். அவர்கள் அப்படிச் செய்யவில்லை. உன்னிடம் அவர்களையும் தாயையும் கொன்றுவிடுமாறு உத்தர விட்டார். நீயும் அப்படியே செய்தாய். இதனால் மகிழ்வு கொண்ட உன் தந்தை உன்னை ஏதாவது வரம் கேட்கும்படி கூறினார். நீயும், கொல்லப்பட்ட அனைவரும் உயிர் பிழைக்க வேண்டும் என்று வரம் வேண்டவே, அவர்களும் பிழைத்தனர். உனது தாயார் மகிழ்வுடன் உனக்கு வரம் அளித்தாள் அல்லவா?

4. பித்ரா மாத்ருமுதே ஸ்தவாஹ்ருத
வியத்தேநோ: நிஜாதாச்ரமாத்
ப்ரஸ்தாயாத ப்ருகோர் கிரா
ஹிமகிராவாராத்ய கௌரீபதிம்
லப்த்வா தத்பரசும் தத் உக்த
தநுஜச்சேதீ மஹாஸ்த்ராதிகம்
ப்ராப்தோ மித்ரம் அதாக்ருத வ்ரணமுநிம்
ப்ராப்யாகம: ஸ்வாச்ரமம்

பொருள்: குருவாயூரப்பனே! உனது தாயாரின் மகிழ்வுக்காக, உனது தந்தையால் மந்திரங்கள் மூலமாகக் காமதேனு (தேவலோகப் பசு) அந்த ஆசிரமத்திற்கு வரவழைக்கப்பட்டது. உனது பாட்டனார் கூறியபடி நீ இமயமலைக்குச் சென்று சிவனைக் குறித்துத் தவம் இயற்றினாய். அவரும் உன் முன்னால் தோன்றி பரசு என்னும் ஆயுதத்தை உனக்கு அளித்தார். அவர் கூறியபடி அசுரன் ஒருவனை அழித்தாய். மேலும் அங்கு இருந்த அக்ருதவ்ரணர் என்ற முனிவரை நண்பராக அடைந்தாய். மீண்டும் உன் இருப்பிடம் வந்தாய்.

5. ஆகேடோப கத: அர்ஜுந: ஸுரகவீ
ஸம்ப்ராத ஸம்பத்கணை:
த்வத்பித்ரா பரிபூஜித: புரகதோ
துர்மந்த்ரி வாசா புந:
காம் க்ரேதும் ஸசிவம் ந்யயுங்க்த
குதியா தே நாபி ருந்தந் முநி
ப்ராணக்ஷேப ஸரோஷ கோஹத சமூ
சக்ரேண வத்ஸ: ஹ்ருத:

பொருள்: குருவாயூரப்பனே! ஒருநாள் கார்த்த வீர்யார்ஜுனன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். பின்னர் உன் ஆசிரமத்திற்கு வந்தான். உன் தந்தை காமதேனு மூலமாகக் கிடைத்தவற்றை அவனுக்கு அளித்தார். அவன் நாட்டிற்குத் திரும்பியவுடன், தனது மந்திரியின் தகாத உபதேசங்களால் காமதேனுவை விலைக்கு வாங்க விருப்பம் கொண்டான். அதற்காகத் தனது படைகளையும் மந்திரி ஒருவனையும் அனுப்பினான். உனது தந்தை சம்மதிக்காமல் போகவே மந்திரி உனது தந்தையை கொன்றான். இதனைக் கண்டு கோபம் கொண்ட காமதேனு அந்தப் படைகளைத் தாக்கி அழித்தது. இருப்பினும் காமதேனுவை அவன் கைப்பற்றினான்.

6. சுக்ரோஜ்ஜீவித தாதவாக்ய சலித
க்ரோதோ அத ஸக்யா ஸமம்
விப்ரத் த்யாத மஹோதரோப நிஹிதம்
சாபம் குடாரம் சராந்
ஆரூட: ஸஹவாஹயந்த்ருகரதம்
மாஹிஷ்மதீமாவிசந்
வாக்பிர்வத்ஸமதாசுஷி க்ஷிதிபதௌ
ஸம்ப்ராஸ்துதா: ஸங்கரம்

பொருள்: குருவாயூரப்பனே! உனது தந்தையின் உயிரை சுக்ராச்சாரியார் மீட்டார். உனது தந்தையிடம் நடந்ததைக் கேட்டாய். உடனே சிவனிடம் ப்ரார்த்தனை செய்தாய். அப்போது தோன்றிய மஹோதரன் என்ற சிவதூதன் கொடுத்த கோடாரி, வில், அம்பு, குதிரை, தேர் ஆகியவற்றை ஏற்றாய். உனது நண்பரான அக்ருதவ்ரணருடன் மாஹிஷ்மதி என்ற நாட்டிற்குச் சென்றாய். காமதேனுவைத் திரும்பத் தரும்படி கேட்டாய். தர மறுத்ததால் யுத்தம் தொடங்கினாய்.

7. புத்ராணாம் அயுதேந ஸப்ததசபிச
அக்ஷௌஹிணீபி: மஹா
ஸோநாநீபி: அநேக மித்ர நிவஹை:
வ்யாஜ்ரும்பிதாயோதன:
ஸத்யஸத்வத்க குடார பாண விதலந்
நிச்சேஷ ஸைந்யோத்கரோ
பீதி ப்ரத்ருத நஷ்ட சிஷ்டதநயஸ்
த்வாமாபதத்ஹேஹய:

பொருள்: குருவாயூரப்பா! கார்த்தவீர்யன் தனது பதினாயிரம் மகன்களுடனும், பதினேழு அக்ஷௌஹிணி படைகளுடனும், மிகப் பெரிய சேனாதிபதிகளுடனும். நண்பர்களுடனும் சேர்ந்து உன்னுடன் யுத்தம் செய்தான். ஒரே நேரத்தில் நீ உனது ஆயுதங்களால் அந்தச் சேனையை அழித்தாய். பலர் ஓடிவிட்டனர். பலர் இறந்தனர். மீதம் இருந்த மகன்களுடன் கார்த்தவீர்யன் உன்னிடம் யுத்தம் செய்தான் அல்லவா?

8. லீலாவாரித நர்மதாஜல
வலல்லங்கேச கர்வாபஹ
ஸ்ரீமத்பாஹு ஸஹஸ்ரம் உக்த
பஹுசஸ்த்ராஸ்த்ரம் நிருந்தந்நமும்
சக்ரே த்வய்யத வைஷ்ணவேபி விடலே
புத்த்வா ஹரிம் த்வாம் முதா
த்யாயந்தம் சித ஸர்வ தோஷம் அவதீ: ஸ:
அகத்பரம் தே பதம்

பொருள்; குருவாயூரப்பனே! ஒரு முறை கார்த்த வீர்யன் பொழுது போக்குவதற்காகத் தனது ஆயிரம் கைகளைக் கொண்டு நர்மதை ஆற்றின்  ஓட்டத்தையே நிறுத்தினான். இதனால் இராவணனின் கர்வத்தை அவன் அடக்கினான். அவன் உன்மீது தனது ஆயிரம் கைகளாலும் ஏவிய அஸ்திரங்களைத் தடுத்தாய். அவன் உன் மீது எறிந்த விஷ்ணு சக்ரமும் பயனில்லாமல் போனது. இதன்மூலம் நீ விஷ்ணு என்று அவன் உணர்ந்தான். உன்னைத் த்யானிக்கத் தொடங்கினான். இதன் மூலம் அவனைப் பீடித்திருந்தத் தோஷங்கள் நீங்கின. அவனை நீ வதம் செய்தவுடன் வைகுண்டம் அடைந்தான்.

9. பூய: அமர்ஷித ஹேஹய ஆத்மஜ கணை:
தாதே ஹதே ரேணுகாம்
ஆகநாநாம் ஹ்ருதயம் நிரீக்ஷ்ய பஹுசோ
கோராம் ப்ரதிஜ்ஞாம் வஹந்
த்யாநாநீத ரதாயுதஸ்த்வம் அக்ருதா
விப்ரத்ருஹ: க்ஷத்ரியாந்
திக்சக்ரேஷு குடாரயந் விசிகயந் நி:
க்ஷத்ரியாம் மேதிநீம்

பொருள்: குருவாயூரப்பனே! இதனால் கோபம் கொண்ட கார்த்தவீர்யனின் மகன்கள் உனது தந்தையைக் கொன்றனர். இதனால் உனது தாய் ரேணுகாதேவி இருப்பது ஒரு முறை மார்பில் அடித்துக் கொண்டு அழுதாள். அதனைக் கண்ட நீ மனம் பொறுக்காமல் இருப்பது ஒரு முறை க்ஷத்ரியர்களைக் கொல்வதாகச் சபதம் பூண்டாய். த்யானத்தின் மூலமாக தேரையும், வில் அம்புகளையும் பெற்றாய். எங்கும் உள்ள ப்ராமணர்களின் துவேஹிகளான க்ஷத்ரியர்களைக் கொன்றாய். இதனால் இந்தப் பூமியில் க்ஷத்ரியர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கினாய்.

10. தாதோஜ்ஜீவநக்ருந் ந்ருபாலககுலம்
த்ரிஸ்ஸப்தக்ருத்வோ ஜயந்
ஸந்தார்ப்யாத ஸமந்த பஞ்சக
மஹாரக்த ஹ்ரெதளக பித்ரூந்
யஜ்ஞே க்ஷ்மாமபி காச்யபாதிஷு
திசந் ஸால்வேந யுத்யந் புந:
க்ருஷ்ண: அமும் நிஹநிஷ்யதீதி
சமிதோ யுத்தாத் குமார: பவாந்

பொருள்: குருவாயூரப்பனே! உனது தந்தையின் உயிரை மீண்டும் மீட்டாய். இருப்பது ஒரு தலைமுறை க்ஷத்ரிய குலத்தை அழித்தாய். பின்னர் ஸமந்த பஞ்சகம் என்ற இடத்தில் பெரிய மடுவில் உனது பித்ருகளுக்குத் தர்ப்பணம் செய்தாய். பின்னர் யாகத்தில் காச்யபர் முதலான முனிவர்களுக்கு நிலங்களை அளித்தாய். ஸால்வன் என்ற மன்னனுடன் யுத்தம் செய்தாய். ஸனத்குமாரர் மூலமாக, ஸால்வனைக் க்ருஷணன் கொல்லப்போகிறான் என்று உணர்ந்து அவனை விட்டாய்.

11. ந்யஸ்யாஸ்த்ராணி மஹேந்த்ர பூப்ருதி
தபஸ்தந்வந் புநர் மஜ்ஜிதாம்
கோகர்ணாவதி ஸாகரேண தரணீம்
த்ருஷ்ட்வார்த்தி தஸ்தாபஸை:
த்த்யாதேஷ்வாஸத்ருதா நலாஸ்த்ர
சகிதம் ஸிந்தும் ஸ்ருவக்ஷேபணாத்
உத்ஸார்யோத்த்ருத கேரள:
ப்ருகுபதே வாதேச ஸம்ரக்ஷ மாம்

பொருள்: ப்ருகு குலத்தவனே! குருவாயூரப்பனே! உனது அஸ்திரங்கள் அனைத்தையும் மஹேந்திர மலையில் வைத்துவிட்டுத் தவம் புரிந்தாய். அந்த நேரம் கோகர்ணம் என்ற பகுதி வரை உள்ள பூமி, நிலத்தில் மூழ்குவதாக உன்னிடம் முனிவர்கள் வேண்டினர். பின்னர் த்யானத்தின் மூலம் ஆக்நேயாஸ்த்ரத்தைத் தொடுத்தாய். இதனைக் கண்டு ஸமுத்திரராஜன் பயந்து நடுங்கினான். நீ ஸ்ருவம் என்ற பாத்திரத்தை எறிந்தாய். அந்தப் பாத்திரம் விழும் இடம் வரை உள்ள ஸமுத்திரத்தை பின்வாங்கச் செய்தாய். இதன் மூலம் கேரள நாட்டை மூழ்காமல் காத்தாய். என்னையும் காக்க வேண்டும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar