வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் கோயில் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் கொடி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவிக்கு திருமஞ்சனம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.ஏற்பாடுகளை டிரஸ்ட் தலைவர் ராஜகோபால், செயலாளர் நாராயணன், பொருளாளர் அழகர், கோயில் நிர்வாக அதிகாரி சரவணன் செய்திருந்தனர்.