பெரும்புகை கெங்கையம்மன் கோவிலில் தீச்சட்டி ஏந்தும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூலை 2011 11:07
செஞ்சி : பெரும்புகை கெங்கையம்மன் கோவிலில் தீச் சட்டி ஏந்தும் நிகழ்ச்சி நடந்தது. செஞ்சி அருகே உள்ள மாரியம்மன், கெங்கையம்மன் கோவில் கூழ் வார்த்தல் மற்றும் தீச்சட்டி ஏந்தல் விழா கடந்த 5ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை செய்தனர். நேற்று (12ம் தேதி) பகல் 2 மணிக்கு மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நடந்தது. தொடர்ந்து கெங்கையம்மன் கோவிலில் சிறப்பு பூஜையுடன், தீச்சட்டி ஏந்தல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் தீச்சட்டி எடுத்து கிராமத்தை வலம் வந்தனர். மாலை 5 மணிக்கு ஆலமரத்தம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவு பூங்கரகம் ஊர்வலம் நடந்தது. இன்று மஞ்சள் நீராட்டுதலும், காப்பு களைதலும் நடக்கிறது.