பதிவு செய்த நாள்
22
ஜூலை
2015
02:07
ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி அருகே, சவுரிபாளையத்தில், புனித மரியமதலேனாள் திருத்தலத்தில், தேர்திருவிழா நடக்கிறது.நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் அடுத்த, மதியம்பட்டியில் (சவுரிபாளையம்) உள்ள புனித மரியமதலேனாள் திருத்தலத்தில், தேர்திருவிழா இன்று(22ந்தேதி) இரவு நடக்கிறது. நேற்று முன்தினம், திருப்பலியுடன் கொடியேற்றம் நடந்தது. கொடியேற்றம் துவங்கி, தினமும், பங்குதந்தைகள் சார்பில், நவநாள் திருப்பலி நடக்கிறது. இந்நிலையில், நேற்று, இறைசெய்தியாக, ‘இயேசுவின் நம்பிக்கை’ என்ற தலைப்பில், பங்குதந்தை யூஜின் டோனி, திருப்பலி ஆற்றினார். தொடர்ந்து, இரவு வேண்டுதல் தேர் பவனி வந்தது. இன்று காலை, ஆயருக்கு வரவேற்பு நிகழ்ச்சியும், திருவிழா திருப்பலி சேலம் மாவட்ட ஆயர் சிங்கராயன் தலைமையில் நடக்கிறது. கன்னட திருபலியாக சேவியர் மரியப்பாவின், மனமாற்றம் மற்றும் பணிவாழ்வு மீட்பின் பரிணாமம் நடக்கிறது. மாலை திருப்பலியில், நற்கருனை ஆசிர்வாதமாக, திருசெங்கோடு மறைவட்ட குருக்கள் பிரான்சிஸ் ஆசைதம்பி உரையாற்றுகிறார். அன்றிரவு, ‘பாதம் தழுவிய பக்தை’ எனும், ஒலி, ஒளி காட்சி நடக்கிறது. இரவு, 12 மணிக்கு, திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, ஐந்து தேர்களால் ஆன, புனிதையின் அலங்கார தேர், ஆலயத்தை சுற்றி பவனி வரும். இதில், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.