திருமலை ஏழுமலையான் உண்டியலில் ஒரே நாளில் ரூ.4.22 கோடி வசூல்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2015 10:07
திருப்பதி: திருமலை ஏழுமலையான் உண்டியலில் ஒரே நாளில் 4.22 கோடி ரூபாய் வசூலானது. திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கோவிலுக்குள் உள்ள உண்டியலில் தங்களால் இயன்ற காணிக்கையை செலுத்துவது வழக்கம். அவ்வாறு பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை தேவஸ்தானம் தினசரி கணக்கிட்டு வங்கியில் வரவு வைக்கிறது.கடந்த 20ம் தேதி மாலை முதல் 21ம் தேதி மாலை வரை பக்தர்கள் உண்டியலில் சமர்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் 4.22 கோடி ரூபாய் வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.இது நடப்பாண்டின் முதல் பெரிய வருமானம்.