திருச்சுழி கோயிலில் ஆடித்தபசு கொடியேற்றத்துடன் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2015 10:07
திருச்சுழி: திருச்சுழி துணை மாலையம்மன் சமேத திருமேனிநாத சுவாமி கோயில் ஆடி தபசு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் அனுக்ஞை வாஸ்து சாந்தி பூஜை நடக்க, நேற்று காலை 10 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. பத்து நாட்கள் நடக்கும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூலை 29 ல் நடக்கிறது. பத்தாம் நாள் விழாவில் காலை 8 மணிக்கு ஆற்றங் கரையில் தீர்த்தம், மாலை 4 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் புறப்பட்டு இரவு 7 மணிக்கு பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் விக்னேஸ்வரன் செய்கிறார்.